பொடா சட்டத் திருத்தம்: அவசர பிரகனடனத்தை வெளியிட்டார் ஜனாதிபதி
டெல்லி:
பொடா மறு ஆய்வுக் கமிட்டிக்கு அதிக அதிகாரம் வழங்கும் அவசர சட்டம் தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதிஅப்துல் கலாம் நேற்றிரவு வெளியிட்டார்.
இதன் மூலம் இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் மாநில அரசுகளை தடுத்து நிறுத்த கமிட்டிக்கு அதிகாரம்கிடைக்கும்.
முன்னதாக ஜனாதிபதி கலாமை பிரதமர் வாஜ்பாய் சந்தித்துப் பேசினார். அப்போது இந்தச் சட்டத் திருத்தம் குறித்துஇருவரும் விவாதித்தனர். பின்னர் இந்த அவசர சட்டம் குறித்த அறிக்கை ஜனாதிபதிக்கு மாலையில்அனுப்பப்பட்டது.
ஜனாதிபதி மாளிகை சட்ட நிபுணர்களுடன் உடனே விவாதித்த கலாம், நள்ளிவிலேயே அந்தச் சட்டத்திற்கு அனுமதிதந்து கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். இதனால் உடனடியாக அந்தச் சட்டம் அமலுக்குவந்துவிட்டது.
இந்த அவசர சட்டத்தின் மூலம், பொடா மறு ஆய்வுக் கமிட்டிகளை மாநில அரசுகளும் அமைக்க முடியும். பொடாதவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கருதுபவர்கள் இந்தக் கமிட்டிகளில் முறையிடலாம்.
அதே நேரத்தில் நீதிபதி அருண் சகார்யா தலைமைலான மத்திய பொடா ஆய்வுக் கமிட்டி எடுக்கும் முடிவுகளுக்குமாநில கமிட்டிகள் கட்டுப்பட வேண்டும். மத்திய கமிட்டியின் தீர்ப்பு ஒரு மாதிரியாகவும், மாநில கமிட்டியின் தீர்ப்புவேறாகவும் இருந்தால் மத்திய கமிட்டியின் தீர்ப்பே இறுதியானதாக இருக்கும்.
மத்திய கமிட்டியின் தீர்ப்புக்கு மாநில அரசுகள் கட்டுப்பட வேண்டும்.
இப்போது அவசர சட்டமாக வெளியாகியுள்ள இந்தச் சட்டத் திருத்தம் தொடர்பான மசோதாவை டிசம்பரில்கூடவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்தும்.
மதிமுக மீண்டும் வலியுறுத்தல்:
இந் நிலையில் பொடா சட்டத்தையே நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும், ம.தி.மு,க பொருளாளருமானகண்ணப்பன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
பொடா மறுஆய்வுக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள், எந்த அளவிற்கு தனி மனிதசுதந்திரத்தைப் பாதுகாக்கும் என்பது தெளிவாக்கப்படவில்லை. எனவே, இச் சட்டமே திரும்பப் பெறவேண்டும்என்பதில் உறுதியாக உள்ளோம்.
பொடா சட்டத்தை நீக்கக் கோரி டிசம்பர் 1ம் தேதி திமுக நடத்தவுள்ள போராட்டத்திற்கு எங்களது முழு ஆதரவுஉண்டு. இருப்பினும் போராட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என்றார்.
ஜெ. அஞ்சுவது ஏன்?: ராமதாஸ் கேள்வி
பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தாவிட்டால், அந்தச் சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தம் குறித்துமுதல்வர் ஜெயலலிதா பயப்படுவது ஏன் என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், காவிரி விவகாரத்தில் எதிர்க் கட்சிகளை ஜெயலலிதா பழிக்கிறார். அதுஅபத்தமானது. எதிர்க் கட்சிகள் ஒத்துழைப்பு தர கையை நீட்டினாலும் அதைத் தட்டிவிடுபவர் தான் ஜெயலலிதா.
காவிரி நீரைப் பெற அவர் என்ன செய்தார். பிரதமரை சந்தித்தாரா?. பிரதமர் இங்கு வந்தால் ஊட்டுக்குப்போகிறார். டெல்லிக்குப் போனால் அவரை சந்திக்காமல் வருகிறார்.
28 மாவட்டங்களுக்கும் ஹெலிகாப்டரில் பறந்தது, ஆடம்பர பந்தல் செலவு ஆகியவற்றுக்கு ஆன செலவுவிவரத்தை ஜெயலலிதா வெளியிட வேண்டும்.
பொடா சட்ட திருத்தத்தை ஜெயலிலதா எதிர்ப்பது, குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதையே காட்டுகிறது.மனித உரிமையை மீறி வைகோவும் நெடுமாறனும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலையானால்ஜெயலலிதா மீது வழக்குப் போடலாம் என்றார் ராமதாஸ்.
-
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!











Click it and Unblock the Notifications