மதுரையில் தொகாடியாவின் திரிசூல வினியோகத்துக்கு தடை
மதுரை:
தேவர் ஜெயந்தியன்று (வரும் 30ம் தேதி) மதுரையில் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தொகாடியா நடத்த இருந்ததிரிசூல வினயோக நிகழ்ச்சிக்கு காவல் துறையினர் இன்று தடை விதித்தனர்.
ஆனால, தொகாடியா தலைமையில் கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சியின் அழைப்பின்பேரில் தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் தொகாடியாஅன்றைய தினம் மதுரையில் திரிசூலங்களை வினியோகிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
இதனால் மதுரையில் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந் நிலையில், திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர்விஜய்குமார் இன்று அறிவித்தார். இந் நிகழ்ச்சியை தடை செய்ததின் முக்கிய நோக்கமே மதுரையில் மதநல்லிணக்கத்தைப் பேணவும், அமைதியை நிலைநாட்டவும் தான் என்றார்.
முன்னதாக தொகாடியாவின் இந்த திரிசூல வினியோக நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரி வகுப்பு வாதத்திற்குஎதிரான கூட்டு நடவடிக்கைக் குழு தமிழக ஆளுநர் ராமமோகன் ராவுக்கு கோரிக்கை விடுத்தது.
அதே போல புதிய தமிழகம் கட்சியும் இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரியது. கோவையில் நிருபர்களிடம்பேசிய அக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தொகாடியாவின் செயல் தேவையற்ற வகுப்பு வாதக்கலவரங்களை உருவாக்கும் என்பதால் திரிசூல வினியோக நிகழ்ச்சிக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தார்.
அவர் கூறுகையில், மதுரையும், அதைச் சுற்றியுள்ள பகுதிளும் ஏற்கனவே சாதி அடிப்படையில் கடந்த சிலஆண்டுகளாக பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் திரிசூல வினியோகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டால்மாநிலத்தில் வகுப்புக் கலவரம் வெடிக்கும்.
பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு அரசும், காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம்











Click it and Unblock the Notifications