நவம்பர் 30ம் தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்த விவசாயிகளுக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசு விதித்துள்ள மின் கட்டணத்தை அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் விவசாயிகள் கட்ட வேண்டும் என்றுசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுவரை விவசாயிகளின் மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது என்று தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும்உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை தமிழக அரசு ரத்து செய்தது. இதையடுத்து, ஒரு குதிரைசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தும் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ. 750 மின் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றுஅரசு உத்தரவிட்டது.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அரசே இந்த தொகையை மானியமாக மணி ஆர்டர் மூலம் வழங்கியது. மின்கட்டணத்தைக் கட்ட நாளை கடைசி நாள் என்றும் கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக விவசாயிகள் சங்கம்மற்றும் விவசாய மின்சார உபயோகிப்பாளர் சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்றுவிசாரித்து தீர்ப்பு அளித்தது. அப்போது ரிட் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், அரசு விதித்தமின் கட்டணத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் விவசாயிகள் கட்ட வேண்டும். அதுவரை மின் இணைப்பைமின்வாரியம் துண்டிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+