சென்னையில் சிலைக்கு ஜெ. மாலை- பிற்பகலில் பசும்பொன் பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayalalithaaசென்னையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று காலை மாலைஅணிவித்தார்.

நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார். சபாநாயகர் காளிமுத்து, அதிமுக கொள்கைபரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிற்பகலில் ஜெயலலிதா ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவரின் பிறந்த ஊரான பசும்பொன் கிராமத்திற்குபுறப்பட்டுச் செல்கிறார். அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி குருபூஜையில்பங்கேற்கிறார்.

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 96-வது பிறந்த நாள் மற்றும் 41-வது நினைவு நாளாகும்.இதையொட்டி அவர் பிறந்த பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் குருபூஜை நடந்து வருகிறது.

ஆயிரக்கணககான தேவர் சமூக மக்கள் அங்கு குவிந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தேவர்சமுதாயத் தலைவர்கள் இன்று நேரில் அஞ்சலி செலுத்துகிறார்கள். வி.எச்.பி துயைத் தலைவர் தொகாடியாவும்வருகிறார்.

தேவர் குருபூஜையையொட்டி, பசும்பொன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸார் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை நகரில் பல்வேறு தேவர் சமுதாய அமைப்புகளின் ஊர்வலம் இன்று மாலை நடக்கவுள்ளது.தொகாடியாவின் கூட்டமும் நடக்கிறது. இதையொட்டி மதுரையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+