தமிழக அரசு தொடர்ந்து அவமதிப்பு வழக்கு தள்ளுபடி: உடனே அப்பீல்
சென்னை:
ஜூனியன் விகடன் பத்திரிக்கை ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட 3 பேர் மீது தமிழக அரசு தொடர்ந்தஅவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து அதை எதிர்த்து அரசு தரப்பில, சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சாப்பாட்டுக்குக் கூட வழியின்றி வாடி வருவதாகவும், நத்தைகளை சுட்டுத்தின்னும் அவல நிலையில் இருப்பதாகவும் ஜூனியர் விகடன் கட்டுரை வெளியிடப்பட்டது.
இந்த செய்தி, தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவமதிப்பு தேடித் தருவதாக உள்ளதாக கூறிபத்திரிக்கை ஆசிரியர் பாலசுப்ரமணியன், நிருபர்கள் லோகநாதன், சரவணன் ஆகியோர் மீது சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயபால், ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரை முதல்வரையோ அல்லதுதமிழக அரசையோ அவமதிக்கும் வகையில் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து அரசுத் தரப்பில் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த மனுவில், முதல்வர்ஜெயலலிதாவுக்கு எதிராக கட்டுரையில் கூறப்பட்டிருந்தவற்றைக் கவனிக்க செஷன்ஸ் நீதிமன்றம் தவறி விட்டது.
முதல்வருக்கு எதிராகவும், அவரையும், அவரது பணியையும், கடமையையும் அவமதிக்கும் வகையில் கட்டுரையில்கூறப்பட்டுள்ளவற்றைக் கூட செஷன்ஸ் நீதிமன்றம் கவனிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி சொக்கலிங்கம், 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
எம்.ஜி.ஆர். ஆட்சியில், விகடன் ஆசிரிய ர் பாலசுப்பிரமணியத்தை கைது செய்ய உத்தரவிட்டார் சபாநாயகராகஇருந்த பி.எச். பாண்டியன். அந்த வழக்கில் ஆசிரியரை விடுவித்தது நீதிமன்றம். மேலும் தமிழக அரசு இதற்காகஅபராதமும் கட்டியது நினைவுகூறத்தக்கது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications