இளங்கோவனின் பதவியே சட்ட விரோதமானது: வாசன் கோஷ்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய பாபநாசம் மற்றும் பேராவூரணி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்குகட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பியது மிகவும் தவறான செயல் என்று சட்டசபை காங்கிரஸ்தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவை வரவேற்று நோட்டீஸ் ஒட்டிய வாசன் கோஷ்டியைச் சேர்ந்த பாபநாசம் எம்.எல்.ஏ ராம்குமார்மற்றும் பேராவூரணி எம்.எல்.ஏ. திருஞான சம்பந்தம் ஆகியோருக்கு சோ.பா. நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இருவரும் விளக்கம் அளிக்காவிட்டால் கட்சியை விட்டு தூக்கி எறியப்படுவார்கள் என்று செயல் தலைவர்இளங்கோவன் எச்சரித்துள்ளர்.

தலைவர் பதவிக்கு வாசனே வந்து கொள்ளட்டும், நான் விலகிக் கொள்கிறேன் என்று கூறி வரும் சோ.பா. திடீரெனவாசன் ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதன் பின்னணியில் இளங்கோவன் இருப்பதாக வாசன்கோஷ்டி கருதுகிறது.

இதனால் வாசன் மற்றும் இளங்கோவன் இடையே போர் வெடித்துள்ளது.

இந் நிலையில், வாசனின் ஆதரவாளரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, சட்டசபை உறுப்பினர்களின் தலைவரான என்னிடம் ஆலோசனை கேட்கவில்லை, சம்பந்தப்பட்டஉறுப்பினர்களிடம் நேரில் விளக்கம் கேட்கவில்லை. ஆனால் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

தவறானவர்களின், தவறுதலான வழிகாட்டுதலின் பேல் சோ.பா. அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதைமிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். என்ன காரணத்திற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதுதெரியவில்லை.

ஜெயலலிதாவை வரவேற்று போஸ்டர் அடித்ததாக வெளியான செய்தி தவறா, சயாரி என்பதை யாரும்விசாரிக்கவில்லை. இந் நிலையில் எப்படி அவர்கள் குற்றம் இழைத்தவர்கள் ஆவர்?

நோட்டீஸ் அனுப்புவதற்கு என்னிடம் அனுமதி கேட்கவே தேவையில்லை என்று இளங்கோவன் கூறியுள்ளார்.அப்படிச் சொல்ல அவருக்கு அதிகாரம் இல்லை. அவர் வகிக்கும் செயல் தலைவர் பதவியே அங்கீகாரம் இல்லா,சட்டவிரோதமான ஒரு பதவி.

கட்சியின் சட்ட திட்டங்களை மீறித்தான் அந்தப் பதவியே அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே என் மீதுகுற்றம் சாட்ட அவர் யார்? என்று காட்டமாக கேட்டார் எஸ்.ஆர்.பி.

எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தால், வாசன், இளங்கோவன் இடையே ஏற்பட்டுள்ள இந்தப்புதிய மோதல், பெரிதாகும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+