இலங்கையில் அவசர நிலை பிரகடனம்
கொழும்பு:
இலங்கையில் அவசரகால நிலையை (எமர்ஜென்சி) அதிபர் சந்திரிகா இன்று பிறப்பித்தார்.
நேற்றிரவு நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை முடக்கி, பாதுகாப்பு, செய்தி மற்றும் உள்துறை அமைச்சர்களின்பொறுப்பை தன் வசம் எடுத்துக் கொண்ட சந்திரிகா இன்று எமர்ஜென்சியை அமலாக்கியுள்ளார்.
இதனால் இலங்கையின் அரசியல் சட்ட சிக்கல் உருவாகியுள்ளது. பிரதமர் ரணில் அமெரிக்காவில் உள்ள நிலையில்இந்த அவசர நிலை அமலாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் அதிகாரம் அதிபருக்குக் கிடைத்துள்ளது.நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அதிகபட்சமாக 10 நாட்கள் மட்டுமே அவசரகால நிலையை அதிபரால்அமல்படுத்த முடியும்.
1983ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி முதல் இலங்கையில் எமர்ஜென்சி அமலில் இருந்து வந்தது. கிட்டத்தட்ட 18ஆண்டுகள் அமலில் இருந்த இந்த அவசரகால நிலை கடந்த 2001ம் ஆண்டில் தான் விலக்கப்பட்டது.
அவசரகால நிலை அமலாக்கப்பட்டாலும் கூட கொழும்வில் இன்று அசாதாரணமான சூழல் ஏதும்காணப்படவில்லை. ராணுவ வீரர்களின் நடமாட்டம் மட்டுமே கூடுதலாக உள்ளது. காவல்துறைத் தலைவராகபொறுப்பு வகிக்கும் இந்திரா டிசில்வா, ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கு ஒருமுறையும் நகரின் சட்டம்-ஒழுஙகுகுறித்து தனக்கு அறிக்கை வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதே போல ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதிபர் மாளிகைக்கு உடனடி தகவல் தருமாறும் காவல்நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் இன்று முப்படைகளின் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தையும் சந்திரிகாகூட்டியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications