ஆசிரியை திட்டியதால் 4-வது வகுப்பு மாணவி தீக்குளிப்பு
கோவை:
கோவையில், ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த 4-வது வகுப்பு மாணவி மண்ணெண்ணைய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். பலத்த காயமடைந்த அச்சிறுமி தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை, சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். கூலித் தொழிலாளியான இவரது மகள் கிருத்திகா,அருகே உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 4-வது வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவி கிருத்திகா, ஆசிரியை மரகதம் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,பாடத்தைக் கவனிக்காமல் அருகில் இருந்த மாணவிகளுடன் பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து ஆசிரியை,கிருத்திகாவைத் திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி கிருத்திகா, மாலையில் வீட்டிற்கு வந்ததும், மண்ணெண்ணைய் ஊற்றித் தீவைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை, அக்கம் பக்கத்தினர் அரசுப் பொது மருத்துவமனைக்குக்கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு கிருத்திகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறைஅதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications