மணல் விலை உயர்வு: போராட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள்
Subscribe to Oneindia Tamil
கோவை:
அரசின் கொள்கை காரணமாக கிடுகிடுவென உயர்ந்துள்ள மணல் விலையை கட்டுப்படுத்தக் கோரி தமிழகம்முழுவதிலும் ஆங்காங்கே கட்டுமானத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதிலும் உள்ள மணல் குவாரிகளை அரசே கையகப்படுத்தி உள்ளது. இதனால் அரசே மணல் அள்ளிவிநியோகம் செய்து வருகிறது. இதன் காரணமாக மணல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
முன்பு ஒரு லாரி லோடு மணல் ரூ. 1000 விற்றுக் கொண்டிருந்தது. தற்போது ரூ. 2,500 முதல் ரூ. 3000 வரைவிற்கிறது. இதனால் கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மணல் விலை உயர்வை எதிர்த்து கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந் நிலையில் கோவையில் ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் செஞ்சிலுவைச் சங்க அலுவலகம்முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications