மது விற்பனை: 22,000 பேர் அடுத்த வாரம் தேர்வு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் மது விற்பனைக் கூடங்களில் பணியாற்றுவதற்காக 22,000 படித்த, வேலையில்லாத இளைஞர்கள்வரும் 13ம் தேதி முதல் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தனியார் சில்லறை மது விற்பனை கடைகளை அரசே கையகப்படுத்தி உள்ளது. இந்தகடைகளை அரசே நிர்வகிக்க உள்ளது. இங்கு பணியாற்றுவதற்காக 22,000 படித்த வேலையில்லாத இளைஞர்கள்தேர்வு செய்யப்படுவார்கள் என்று சமீபத்தில் அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழகம் முழுவதிலும் அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் அமைக்கப்படவுள்ள 5,000க்கும் மேற்பட்டவிற்பனை நிலையங்களில் பணியாற்றுவதற்காக வரும் 13, 14 மற்றும் 16, 17 ஆகிய தேதிகளில் பட்டதாரிஇளைஞர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.
இதற்காக தகுதி வாய்ந்த இளைஞர்களின் பட்டியலைத் தருமாறு வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு டாஸ்மாக்நிறுவனம் தகவல் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications