உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: ஜெ. விழா திடீர் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடப்பதாக இருந்த காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கும்நிகழ்ச்சி திடீர் என்று ரத்து செய்யப்பட்டது.
காவல்துறையினர், தீயணைப்புப் படையினர், சிறைத்துறை மற்றும் ஊர்க்காவல் படையினருக்கான குடியரசுத்தலைவர் மற்றும் முதலமைச்சரின் பதக்கங்களை வழங்கும் விழா சென்னையில் இன்று மாலை 4.30 மணிக்குசென்னையில் நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் இந்த விழா திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.வரும் 18ம் தேதி விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்களின் கைது விவகாரம் தொடர்பாக சபாநாயகரின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளநிலையில் ஏற்பட்ட திடீர் சூழ்நிலை காரணமாகவே விழா ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications