கல்லூரி முதல்வர் அறையை அடித்து நொறுக்கிய சட்ட மாணவர்கள்
பாண்டிச்சேரி:
புதுவையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாத சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயற்சித்ததால்ஆத்திரமடைந்த மற்ற மாணவர்கள் தேர்வைப் புறக்கணித்து விட்டு கல்லூரி முதல்வரின் அறையை அடித்துநொறுக்கினர்.
புதுவையில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் 2-வது ஆண்டு படித்து வருபவர் சுரேஷ். இவரது வருகைப்பதிவேடு திருப்திகரமாக இல்லாததால், அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து கல்லூரி முதல்வரின் அறைக்குச் சென்ற சுரேஷ், தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறுவற்புறுத்தியுள்ளார். ஆனால் முதல்வர் அனுமதி தரவில்லை. இதையடுத்து கையில் வைத்திருந்த தூக்கமாத்திரைகளை விழுங்கினார். உடனடியாக அவரை ஆசிரியர்களும், மாணவர்களும் அரசு மருத்துவமனைக்குக்கொண்டு சென்று சேர்த்தனர்.
இந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்வு தொடங்கியது. ஆனால் தேர்வு எழுதாமல் புறக்கணித்த மாணவர்கள்கல்லூரி முதல்வரின் அறை முன்பு வந்து கோஷமிட்டனர். பின்னர் முதல்வரின் அறைக்குள் புகுந்து அடித்துநொறுக்கினர். அப்போது முதல்வர் அங்கு இல்லை.
கடந்த ஆண்டு, இதே கல்லூரியில் படித்து வந்த ஒரு மாணவர் தன்னை தேர்வு எழுத அனுமதிக்காததைக் கண்டித்துஉயரமான கோபுரத்தின் மீது ஏறி நின்று தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications