தமிழகத்தில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடக்கம்
சென்னை:
வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணியும், இறந்துபோன மற்றும் வேறு இடத்திற்குக் குடிபோன வாக்காளர்களின் பெயர்களைத் திருத்தி அமைக்கும் பணியும் நாளைதொடங்குகிறது. இந்தப் பணி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறும்.
வரும் டிசம்பர் 1ம் தேதியுடன் 18 வயது பூர்த்தியடைபவர்கள் புதிய வாக்காளர்களாகத் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
புதிய வாக்காளர்களைச் சேர்க்க 66 லட்சம் படிவங்களும், பட்டியல் திருத்தப் பணிக்காக 11 லட்சம் படிவங்களும்தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை இலவசமாகவே வழங்கப்படும்.
கிராம நிர்வாக சபைக் கூட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியரல் வாசிக்கப்படும். அதில் தங்கள் பெயர் இடம்பெறாதவர்கள் படிவங்களை வாங்கிப் பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலகரிடம் கொடுக்கவேண்டும்.
அதேபோல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டத்திலும்வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும்.
திருத்தப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியல் வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி வெளியிடப்படும். இப் பணிகள்மூலம் தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை.பல லட்சம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதுதமிழகத்தில் 4.69 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
தவறான தகவல் கொடுத்து பெயர் பதிவு செய்வது, 1950ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 31ன் படிதண்டனைக்குரிய குற்றமாகும்.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications