தமிழகத்தில் குடிமகன்களின் எண்ணிக்கை: சர்வே எடுக்கிறது போலீஸ்
சென்னை:
தமிழகம் முழுவதும் மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாமா என்பது குறித்து ஆராய சர்வேஎடுக்குமாறு போலீசுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்தும் என்ற அறிவிப்புக்குப் பின் மதுக்கடைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதுகுறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதற்காக சர்வே ஒன்றை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
மாவட்டவாரியாக மதுக்கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு, கடைகளுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு,கடைகளின் விற்பனை விகிதம், அதிகமாகத் தேவைப்படும் கடைகள் எவ்வளவு, புதிய கடைகளைத் திறப்பதன்மூலம் விற்பனை அதிகரிக்குமா? வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த முடியுமா? என்பது குறித்து சர்வேஎடுக்கப்பட்டு வருகிறது.
சர்வே முடிவுகள் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அனுப்பப்படும். வழக்கமான போலீஸ் வேலைகளை இரண்டுநாட்களுக்கு ஒதுக்கி வைத்து விட்டு இந்த சர்வே வேலையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
விற்பனையாளர் தேர்வில் குழப்பம்:
இதற்கிடையே தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தவுள்ள மதுபான விற்பனை நிலையங்களில்மேற்பார்வையாளர் பதவிக்கு, அரசு நிர்ணயித்துள்ள வயது வரம்பு மற்றும் டெபாசிட் தொகை காரணமாகபட்டதாரி இளைஞர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மது விற்பனை நிலையங்களில் மேற்பார்வையாளர்களாக பணியாற்றுவதற்கு வேலை வாய்ப்பு மையங்கள் மூலமாகபட்டதாரி இளைஞர்களைத் தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆள் தேர்வு இன்று தமிழகத்தில்தொடங்கியது.
இருப்பினும் அரசு நர்ணயித்துள்ள இரண்டு நிபந்தனைகள் காரணமாக இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்திநிலவுகிறது. 35 வயதுக்கு குறைந்தவர்களை மட்டுமே அரசு தேர்வு செய்யவுள்ளது. மேலும், தேர்வுசெய்யப்படுவோர் ரூ. 50,000யை டெபாசிட்டாகக் கட்ட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
இது, ஆள் தேர்வுக்கு வந்திருந்த பட்டதாரி இளைஞர்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. திருச்சி,மதுரை ஆகிய ஊர்களில் அதிகாரிகளை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மறியல் செய்தனர்.இதேபோல, மதுரை ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் இன்று ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
இதற்கு நேர் மாறாக சென்னை, கோவை ஆகிய ஊர்களில் ஆள் தேர்வுக்கு போதிய ஆட்கள் வரவில்லை. தேர்வுநடந்த மையங்களில் ஆட்களே இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதற்கிடையே 1995ம் ஆண்டுக்கு முன் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தவர்களுக்கு அழைப்புஅனுப்பப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications