மதுபான மேற்பார்வையாளர் வேலை: பட்டதாரி இளைஞர்களிடம் ஆர்வம் இல்லை!
சென்னை:
தமிழக அரசுக்குச் சொந்தமான டாஸ்மார்க் நிறுவனம் நடத்தவுள்ள மதுபானக் கடைகளில் மேற்பார்வையாளர்பதவியில் சேர சொற்ப எண்ணிக்கையிலான பட்டதாரி இளைஞர்களே வந்ததால் தேர்வு மையங்கள்வெறிச்சோடின.
வருகிற டிசம்பர் மாதம் முதல், தனியார் சில்லறை மதுபான விற்பனை நிலையங்களை மூடி விட்டு தமிழக அரசேதனது கூட்டுறவு வாணிபக் கழகமான டாஸ்மார்க் மூலம் மது விற்பனையை மேற்கொள்ளவுள்ளது.
இங்கு மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றுவதற்காக பட்டதாரிகளை தேர்வு செய்யும் பணி நேற்று முதல்நடந்து வருகிறது. ஆனால், மாதம் ரூ. 2,000 மட்டுமே சம்பளம் மற்றும் ரூ. 50,000 டெபாசிட் செலுத்த வேண்டும்என அரசு நிபந்தனை விதித்துள்ளதால் இதில் சேர இளைஞர்களிடையே ஆர்வம் இல்லை.
சென்னையில் ஆள் தேர்வு நடைபெறும் அண்ணா நகர், ஆழ்வார்ப்பேட்டை, அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்டமையங்களில் ஆட்களே வரவில்லை. ஓரிரண்டு பேரே வந்திருந்தனர். அவர்களும், டெபாசிட் தொகையைக் கட்டமுடியாது என்று கூறி விட்டுச் சென்று விட்டனர்.
இதேபோல, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் இளைஞர்கள் கூட்டம் இல்லை.
அதே நேரத்தில் விற்பனையாளர்கள் பதவியில் சேர ஓரளவுக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர் இளைஞர்கள். இந்தப்பதசவிக்கு ரூ. 15,000 டெபாசிட் கட்ட வேண்டும். மாத ஊதியம் ரூ. 750 ஆகும். இந்த வேலையில் சேர சிலபகுதிகளில் பெண்களும் ஆர்வம் காட்டினர். ஆனால், பெண்களுக்கு மதுக்கடை வேலையில்லை என்று திருப்பிஅனுப்பப்பட்டுவிட்டனர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications