முதுமலை யானைகள் முகாம்: பார்வையிட வருகிறது மத்திய வனத்துறை குழு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதுமலையில் நடைபெறும் யானைகள் முகாம் குறித்து விசாரணை நடத்த மத்திய வனத்துறையின் 7 பேர் குழுதமிழகம் வர உள்ளது.

கோவில் யானைகளைக் கட்டாயப்படுத்தியும், அடித்தும், துன்புறுத்தியும் முதுமலையில் முகாம் நடத்துவதற்கு திமுகஅமைச்சர் பாலு தலைமை வகிக்கும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் நேற்று தடை விதித்தது.முதல்வர் ஜெயலலிதாவின் நன்மைக்காக கஜபூஜை நடத்தும் விதத்திலேயே இந்த முகாம் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகினறன.

இந் நிலையில் தமிழக அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், முதுமலையில் நடைபெறும் முகாமுக்கு மத்தியஅரசு தடை விதிக்கவில்லை. யானைகளை லாரிகளில் ஏற்றிக் கொண்டு செல்வதற்குத்தான் தடைவிதிக்கப்பட்டுள்ளது. யானைகள் முகாம் குறித்த அறிக்கையையும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கோரியுள்ளது.

அமைச்சகம் கோரியபடி அறிக்கை அனுப்பப்படும். ஆனால் முகாமில் கலந்து கொள்ளும் 100 யானைகளும்ஏற்கனவே வந்து விட்டன. எனவே மேலும் யானைகளை லாரிகளில் ஏற்றிக் கொண்டு வருவது என்ற பேச்சுக்கேஇடமில்லை.

முதுமலை முகாமில் தற்போது மொத்தம் 100 யானைகள் உள்ளன. இவற்றில் இந்து அறநிலையத்துறை கோவில்யானைகள் 37, தனியாருக்குச் சொந்தமானவை 18, வனத் துறைக்குச் சொந்தமான 45 யானைகள் ஆகியவைஅடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

லாரிகளில் ஏற மறுத்த யானைகளை அங்குசத்தால் குத்தியும், அடித்து, உதைத்தும் ஏற்றியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந் நிலையில் சென்னை வந்த டி.ஆர். பாலு விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில், யானைகளைக்கூட்டிச் சென்று முகாம் அமைத்து சில நாட்களுக்கு உணவு கொடுத்து, புத்துணர்வு அளித்தால் மட்டும் பிரச்சினைதீர்ந்து விடாது. அவற்றுக்கு ஆண்டு முழுவதும் உணவும் பராமரிப்பும் வழங்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

யானைகளை கூட்டிச் செல்லும்போது அவை துன்புறுத்தப்பட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது. ரத்தம் சொட்டும்வரை அடித்திருக்கிறார்கள். யானைகள் துன்புறுத்தப்படுவதை டிவியில் நானும் டிவியில் பார்த்தேன். அதனால்தான்தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

யானைக்கு ரத்தம் வந்தாலும் மத்திய அரசு கேள்வி கேட்கும், தனி மனிதன் பாதிக்கப்பட்டாலும் கேள்வி கேட்கும்என்றார்.

குழு வருகை:

இந் நிலையில் முதுமலை முகாமிற்குக் கொண்டு வரப்பட்ட யானைகளின் நிலையை நேரில் கண்டறிய 7 பேர்வனத்துறை நிபுணர்கள் மத்தியக் குழு முதுமலை வரவுள்ளது. முகாமிற்கு கொண்டு வரப்பட்டபோது அவைதாக்கப்பட்டனவா, துன்புறுத்தப்பட்டனவா என்பதை அந்தக் குழு ஆராயும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+