ஜெ. மீதான டான்சி வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட டான்சி வழக்கில் நாளைக் காலை 10.30 மணியளவில் தீர்ப்புகூறப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள டான்சி நிறுவனத்திற்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டங்கள் கடந்த அதிமுகஆட்சியில் விற்கப்பட்டன.

இதை ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ்ஆகிய நிறுவனங்கள் வாங்கின.

அரசுக்குச் சொந்தமான நிலத்தை முதல்வர் பதவி வகிப்பவர் வாங்கியது தவறு என்றும், நிலத்தை வழிகாட்டிமதிப்பீட்டிற்குக் குறைவாக வாங்கியதன் மூலம் அரசுக்கு 3 கோடிரூபாய் அளவில் இழப்பு ஏற்படுத்தியதாகவும்ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

திமுக ஆட்சியில் மூன்றாவது தனி நீதிமன்றம் அமைத்து இரு நிறுவனங்களின் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது.விசாரணையின் முடிவில் நீதிபதி அன்பழகன் ஜெ. பப்ளிகேஷன் வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு தலா 3ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

இதேபோல் சசி எண்டர்பிரைசஸ் வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உட்பட 5 பேருக்கு தலா 2 ஆண்டுசிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஜெயலலிதா உட்பட அனைவரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்தஉயர் நீதிமன்ற நீதிபதி தினகர், ஜெயலலிதா மற்றும் சசிகலாவை விடுதலை செய்து 4.12.2001 அன்று தீர்ப்புகூறினார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்கின் முதல் புகார்தாரரும், திமுக பிரமுகருமான ஆலந்தூர் பாரதி, ஜனதாக் கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் எஸ்.ராஜேந்திர பாபு, பி.வி.ரெட்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். வழக்கறிஞர்கள்வாதத்திற்குப் பின்னர், வழக்கின் தீர்ப்பை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 26ம் தேதி ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு நாளைக் காலை 10.30 மணியளவில் வழங்கப்படவுள்ளது. தீர்ப்பைப் பொறுத்துஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலமே மாறும் சூழ்நிலை உள்ளதால் அகில இந்திய அளவில் இந்தத் தீர்ப்புமிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீர்ப்பு ஜெயலலிதாவுக்குப் பாதகமாக அமைந்தால் அடுத்த 6 வருடங்களுக்கு அவர் தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+