ஏரிகளை சுற்றி மரம் நட ஜெ. உத்தரவு
சென்னை:
சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஏரிகளைச் சுற்றிலும் உள்ள நீர்ப்பிடிப்புப்பகுதிகளில் மரம் நடும் திட்டத்தை உடனடியாக மேற்கொள்ளுமாறு சென்னை பெருநகர குடிநீர் விநியோகம்மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்திற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வட கிழக்குப் பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ மழையின்போது பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஏரிகளுக்கு போதுமான நீர் கிடைக்கவில்லை.இதனால் இங்கு நீர் இருப்பு வெகு குறைவாக உள்ளது.
மேலும், இந்த ஆண்டு இதுவரை கிருஷ்ணா நீரும் சென்னைக்கு வந்து சேரவில்லை. தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையும் போதுமானதாக இல்லை. இதனால் பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஏரிகளைச் சுற்றிலும்உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மரக் கன்றுகளை நட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மூன்று ஏரிகளைச் சுற்றிலும் உள்ள 2057 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 15,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இந்தப் பணி சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. ஒரு வார காலத்திற்கு மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் மொத்தமாக 7.4 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது.ஏரிகளின் மொத்தக் கொள்ளளவில் நான்கில் ஒரு பங்குதான் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications