சிறையில் 500 நாட்களைக் கடந்தார் வைகோ!
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோ சிறையில் இன்றுடன் 500வது நாளை பூர்த்தி செய்கிறார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைகோ வேலூர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் எதுவும் கோராமல், தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வரும் வைகோஇன்றுடன் 500வது நாளை பூர்த்தி செய்கிறார்.
வேலூர் சிறையில் இத்தனை காலம் இதுவரை எந்த அரசியல் தலைவரும் சிறைவாசம் அனுபவித்ததில்லை என்றுகூறப்படுகிறது. அந்த வகையில் ராஜாஜி, காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களை முந்தி விட்டார் வைகோ.
நீண்ட நாட்களாக சிறையில் இருந்தாலும், இன்னும் தனது சுறுசுறுப்பு, முறுக்கு, தைரியம் குறையாமல் படுதெம்பாகவே வைகோ உள்ளதாக அவரைச் சந்தித்து வரும் கட்சிப் பிரமுகர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள்.
தினசரி கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வைகோவைச் சந்தித்து கட்சி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திவருகிறார்கள். வைகோவும் சிறையிலிருந்தபடியே கட்சியைக் கட்டுக் கோப்பாக நடத்தி வருகிறார்.
இதுவே வேறு கட்சியாக இருந்திருந்தால் இன்னேரம் சிதறிப் போயிருக்கும். இது வைகோவின் தலைமைக்குக்கிடைத்த பெருமை என்று மதிமுகவினர் மார் தட்டிக் கொள்கிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி முதல் பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு வரை பல கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள்வைகோவைச் சந்தித்து பேசியுள்ளனர். தன்னைச் சந்திக்க வரும் அனைவரிடம் தனது மிடுக்கு குறையாமல்,எந்தவித சலுகைகளையும் கேட்காமல் வழக்கம் போலவே இருந்து வருகிறார் வைகோ.
சிறைக்கு வெளியே நடைபெறும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் வைகோசம்பவங்களுக்கேற்ப சிறைக்குள்ளும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார். காவிரிப் பிரச்சினைக்காகஒரு முறையும், பத்திரிக்கையாளர்கள் கைது உத்தரவைக் கண்டித்து ஒரு முறையும், மதிமுக நிர்வாகிகளை பொடாசட்டத்தில் கைது செய்ததைக் கண்டித்து ஒரு முறையும் என மொத்தம் 3 முறை அவர் சிறைக்குள் உண்ணாவிரதம்இருந்துள்ளார்.
சிறைக்குள் அடைத்தாலும், இன்னும் தான் சிங்கம்தான், கர்ஜிப்பதைக் கைவிட மாட்டேன் என்று நிரூபித்துவருகிறார் வைகோ.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications