பெங்களூரில் தனி கோர்ட்: எனக்கு பிரச்சனையில்லை- ஜெ
சென்னை:
பெங்களூரில் அமைக்கப்படும் தனி கோர்ட்டினால் எனக்கு பிரச்சனை ஏதும் இல்லை. ஒரே ஒரு முறை தான் நான்அங்கு சென்று சாட்சி அளிக்க வேண்டி வரும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
வருமானத்தை மீறி ரூ. 66 கோடி சொத்து சேர்த்த வழக்கு தமிழகத்தில் முறையாக நடக்கவில்லை என்பதால் அதைபெங்களூருக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. இன்னும் 5 வாரத்தில் அங்கு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு விடும்.
இந் நிலையில் டான்சி வழக்கில் தப்பியது குறித்து நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதாவிடம், சொத்துக் குவிப்புவழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு ஜெயலலிதா பதிலளிக்கையில்,
வழக்கை பெங்களூருக்கு மாற்றிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை.இந்திய குற்றவியல் சட்டம் (சிஆர்பிசி) 313வது பிரிவின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மட்டுமேநான் நேரில் அந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
மற்றபடி என் வழக்கறிஞர்களே வழக்கை நடத்தினால் போதுமானது. இதனால் ஒரு முறை தான் நான் நேரில் போகவேண்டியிருக்கும். விசாரணைக்காக பெங்களூர் செல்வதில் எனக்கு தயக்கமோ, பிரச்சனையோ இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications