டான்சி வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை: பரிகாரம் தேட நீதிபதிகள் அறிவுரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டான்சி வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவையும் சசிகலாவையும் மூன்று அதிகாரிகளையும் உச்ச நீதிமன்றம்விடுதலை செய்து உத்தரவிட்டது.

அதே நேரத்தில் டான்சி நிலத்தை திருப்பித் தந்துவிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடிந்து 14மாதங்களுக்குப் பின் இந்தத் தீர்ப்பு வழக்கு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராஜேந்திர பாபு, நீதிபதி வெங்கட்ராம ரெட்டி ஆகியோர் கூறியதாவது:

இந்த நில பேரத்தில் ஜெயலலிதாவுக்கு சம்பந்தம் இருப்பது தெரிகிறது. நடத்தை விதிகளையும் அவர் மீறியுள்ளார்.ஆனால், அதை இந்திய தண்டனைச் சடத்தின் கீழ் குற்றமாக கருத முடியாது.

மேலும் இந்த நில பேரத்தில் ஜெயலலிதாவுக்கு தொடர்பு உள்ளதை நிரூப்பிக்கும் அளவிற்கு சட்டப்பூர்வமானஆதாரங்கள் இல்லை, எனவே சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு படி அவரை விடுதலை செய்கிறோம்.

பத்திரத்தில் உள்ள கையெழுத்தே தன்னுடையது அல்ல என்று மறுக்கும் அளவுக்கு ஜெயலலிதா போய்விட்டார்.முதல்வர் போன்ற முக்கியமான பதவியில் இருக்க மிகுந்த நேர்மை வேண்டும். பதவியின் கெளரவத்தை காப்பாற்றவேண்டும். அப்போது தான் சரியான நிர்வாகத்தை நடத்த முடியும்.

இந்த வழக்கில் தனது மனசாட்சியை ஒருமுறை ஜெயலலிதா நினைத்துப் பார்க்க வேண்டும். செய்த தவறுக்கு உரியபரிகாரம் தேட வேண்டும்.

இந்த நில பேரத்தில் ஜெயலலிதாவை நேரடியாகத் தொடர்புப்படுத்தும் சாட்சி இல்லை. ஆனாலும் டான்சி நிலத்தைமீண்டும் அரசிடமே நிபந்தனையின்றி ஜெயலலிதா ஒப்படைக்க வேண்டும்.

முதல்வர் பதவியில் இருப்பவர்கள் நிலத்தை வாங்க தடை இருக்கும் நிலையிலும், முதல்வர் விரும்பிய விலைக்குஅரசு நிலத்தை விற்க அதிகார வர்க்கம் அதிகப்படியான ஆர்வம் காட்டியுள்ளது.

சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டியதில்லை. இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கிறோம். இது தொடர்பாகதிமுக வழக்கறிஞர் ஆர்.எஸ். பாரதி மற்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் தாக்கல்செய்த மேல் முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

டான்சி நில வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றபோது, ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்நிலத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல அந்த நிலத்தை திருப்பித்தருவதற்கான ஆவணங்களையும் தயார் செய்த ஜெயலலிதா, அங்கு கட்டப்பட்ட ஜெயா பப்ளிகேசன்ஸ் மற்றும் சசிஎண்டர்பிரைசஸ் நிறுவன கட்டடங்களையும் இடித்தார்.

இதனால் உடனடியாக இந்த நிலம் மீண்டும் டான்சியிடம் ஜெயலலிதாவால் ஒப்படைக்கப்பட்டுவிடும். டான்சிநிலத்தை ஜெயலலிதா முறைகேடாக வாங்கியதால் அரசுக்கு ரூ. 2.76 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக புகார்கூறப்பட்டது.

மீதமுள்ள வழக்குகள்:

டான்சி வழக்கில் இருந்து ஜெயலலிதா தப்பினாலும், அவர் மீது வருமானத்தை மீறி ரூ. 66 கோடி சொத்து சேர்த்தவழக்கு (பெங்களூருக்கு மாற்றப்பட்டது), கொடைக்கானலில் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் கட்ட அனுமதி தந்தவழக்கு, ஸ்பிக் பங்கு பத்திர ஊழல் வழக்கு, சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கு,

வெளிநாட்டில் இருந்து லெக்ஸஸ் காரை முறைகேடாக இறக்குமதி செய்த வழக்கு, லண்டனில ரூ. 45 கோடிக்குஹோட்டல் வாங்கிய வழக்கு, கலர் டிவி வழக்கு, நிலக்கரி வழக்கு, அநாமதேயமாக 30,000 டாலர் பரிசாகக்கிடைத்த வழக்கு (இதை சிபிஐ விசாரிக்கிறது), மீனா அட்வர்டைசிங் வழக்கு, கிரானைட் வழக்கு, வருமான வரிவழக்குகள் நிலுவையில் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+