கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தனி அலுவலர் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிதாக உருவாகியுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட தனி அலுவலராக மங்கத் ராம் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம்அமையும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து புதிதாக அமையவுள்ள மாவட்டத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கும், நிர்வாகத்தைமேற்கொள்வதற்கும் தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் நிர்வாகத் துறையின் இணை ஆணையராக இருக்கும் மங்கத் ராம் ஷர்மா, கிருஷ்ணகிரி மாவட்ட தனிஅலுவலராக செயல்படுவார் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தப் பதவி மாவட்ட ஆட்சித் தலைவர் பதவிக்குஇணையானது என்றும் அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications