அழகிரிக்கு 4 நாட்கள் ஜாமீன் நிபந்தனை தளர்வு
சென்னை:
முரசொலி மாறன் இறுதிச் சடங்கு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, திமுக தலைவர்கருணாநிதியின் மகன் அழகிரியின் ஜாமீன் நிபந்தனை நான்கு நாட்களுக்கு தளர்த்தப்பட்டது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அழகிரி வேலூரில்தங்கியுள்ளார். மாறன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், அது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், தனதுஜாமீன் நிபந்தனையை தளர்த்துமாறு கோரி அழகிரி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி சொக்கலிங்கம், மாறன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் மற்றும் அதுதொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் அழகிரிக்கு அனுமதி அளித்தார்.
வியாழக்கிழமை வரை அழகிரிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை தளர்த்தப்படுவதாகவும், வெள்ளிக்கிழமை முதல்வேலூர் முதலாவது குற்றவியல் நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை கோர்ட்டில் ஆஜர்: இதற்கிடையே, திருட்டு விசிடி வழக்கு தொடர்பாக நேற்று காலை மதுரை 5-வதுகுற்றவியல் நீதிமன்றத்தில் அழகிரி ஆஜரானார். அப்போது வழக்கை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிஇந்திராணி உத்தரவிட்டார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications