பிரபாகரனை சந்தித்த ஐரோப்பிய யூனியன் தூதர் இந்தியா வருகை
சென்னை:
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உறுதியாக இருப்பதாக ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை ஆணையர் கிறிஸ் பேட்டன் கூறினார்.
இலங்கையில் அதிபர் சந்திரிகாவையும், நேற்று வவுனியாத் தீவுக்குச் சென்று பிரபாகரனையும் சந்தித்துப் பேச்சு நடத்திய பேட்டன் இந்தியா வந்துள்ளார். இன்று சென்னையில் ஆளுநர் ராம்மோகன் ராவை அவர் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அமைதி முயற்சிகளுக்கு பிரபாகரன் துணை நிற்க வேண்டும் என்ற சர்வதேச சமுதாயத்தின் எதிர்பார்ப்பை அவரிடம் விளக்கினேன். இனப் பிரச்சனைக்கு அமைதியான வழியில் தீர்வு காண்பதில் பிரபாகரனும் பிற இலங்கைத் தலைவர்களும் உறுதியாக உள்ளனர்.
நிச்சயம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு ஏற்படும்.
விடுதலைப் புலிகள் தனி நாடு கோரிக்கையை நிரந்தரமாகக் கைவிட வேண்டும், அதை வலியுறுத்தவே கூடாது. வன்முறைப் பாதைக்குத் திரும்பவே கூடாது என்று பிரபாகனை கேட்டுக் கொண்டேன் என்றார்.
பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் அமைதித் தீர்வுகள் குறித்து உரையாற்றிய பேட்டன், இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லீம்களையும் பங்கெடுக்கச் செய்வது அவசியம். இலங்கையின் எதிர்கால, நிரந்தர அமைதிக்கு இது மிக முக்கியம்.
தீவிரவாத பாதைக்கு புலிகள் மீண்டும் சென்றால் அது சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்திவிடும் என்பதை பிரபாகரனிடம் நான் தெரிவித்தேன் என்றார்.
-
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்!












Click it and Unblock the Notifications