அரசு ஒயின்ஷாப் விற்பனையாளர்களுக்கு 2 ஷிப்ட்!
சென்னை:
அரசு நடத்தவுள்ள மதுக் கடைகளில் பணியாற்றவுள்ள விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் 2 ஷிப்ட்களாக பணியாற்றுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதிலும் தனியார் சில்லறை மது பான விற்பனை நாளையுடன் முடிவடைகிறது. நாளை மறுநாள் சனிக்கிழமை முதல் அரசே நடத்தவுள்ள மது பான விற்பனை தொடங்குகிறது. இதற்காக பார் வசதியுடன் மதுக் கடைகளுக்கான இடம் தேர்வாகி விட்டது.
அரசு நடத்தவுள்ள மதுக் கடைகளில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ள விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு இன்று வேலை நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பல்வேறு விதிறைகளை வகுத்துள்ள அரசு, அவர்கள் இரண்டு ஷிப்ட்களில் பணியாற்றுவார்கள் என்று அறிவித்துள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு ஷிப்ட்டும், மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒரு ஷிப்ட்டும் இருக்கும். காலை ஷிப்ட்டில் ஒரு மேற்பார்வையாளர், ஒரு விற்பனையாளர் பணியில் இருப்பர். மாலை ஷிப்ட்டில் இரண்டு விற்பனையாளர்கள் பணியில் இருப்பர் என்றும் அரசு அறிவித்துள்ளது.
விற்பனையாளர், மேற்பார்வையாளர்களுக்கு நாளை பயிற்சி வகுப்பு நடக்கவுள்ளது.
இந் நிலையில், மதுக் கடைகளில் பணியாற்றவுள்ள விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு அரசு பல்வேறு விதிமுறைகளில்,
பாட்டில்கள் உடைந்தால் அல்லது காணாமல் போனால், அதற்குரிய தொகை விற்பனையாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
கடைகள் மற்றும் பார்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது விற்பனையாளர்களின் பொறுப்பு. தவறினால் அவர்கள் நீக்கம் செய்யப்பட்டு டெபாசிட் தொகை பறிமுதல் செய்யப்படும்.
விற்பனையாளர்களும், மேற்பார்வாைளர்களும், ஒரு மாவட்டத்திற்குள் எந்தக் கடைக்கு வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யப்பட முடியும்.
இந்த வேலையை நிரந்தர அரசு வேலையாகக் கருத முடியாது. டாஸ்மார்க் நிறுவனத்திலோ அல்லது வேறு அரசுத் துறையிலோ நிரந்தர அரசு வேலை கோரும் உரிமை விற்பனையாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் கிடையாது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications