தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு கேரள டிஜிபி வேண்டுகோள்
சென்னை:
சபரிமலைக்கு வரும் தமிழக ஐயப்ப பக்தர்கள் தங்களது பஸ்கள், மினி பஸ்கள் போன்ற வாகனங்களை நிலக்கல் என்ற இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று கேரள மாநில காவல்துறைத் தலைவர் ஹோர்மீஸ் தரகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை மூலமாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சபமலைக்கு வரும் பக்தர்கள் பம்பா வரை தங்களது பஸ்களில் வரலாம். பம்பா காவல் நிலையம் வந்ததும் அவர்கள் இறங்கிக் கொண்டு வாகனங்களை நிலக்கல்லுக்கு அனுப்பி விட வேண்டும்.
தரிசனம் முடிந்து திரும்புகையில், பம்பாவிலிருந்து நிலக்கல் வரை கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ள வாகனங்களில் சென்று பின்னர் தங்களது வாகனங்களில் பயணிக்கலாம்.
எந்தக் காரணம் கொண்டும், நிலக்கல்லில் இருந்து பம்பாவுக்கு பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வேன், கார், ஜீப் போன்ற வாகனங்களில் வருவோர் அவற்றை பம்பா, திரிவேணி, ஹில்டாப், செக்குப்பாலம் ஆகிய இடங்களில் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications