நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பம்: மாறனுக்கு அஞ்சலி
டெல்லி:
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
கூட்டத்தின் முதல் நாளான இன்று, மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இரு அவைகளும் இன்று ஒத்தி வைக்கப்பட்டன.
நாளை முதல் மீண்டும் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்.
நாட்டையே கலக்கிக் கொண்டிருக்கும் போலி முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக எதிர்க் கட்சிகள் பெரும் பிரச்சனையைக் கிளப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரன்சி மற்றும் முத்திரைத் தாள்களை அச்சடிக்கும் அரசுக்குச் சொந்தமான நாசிக் பிரஸ்சில் இருந்து இயந்திரங்களை வாங்கி போலி முத்திரைத் தாள்கள் அச்சடிக்கப்பட்டு ரூ. 30,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.
இதில் முக்கியக் குற்றவாளியான தெல்கியை மும்பை முன்னாள் போலீஸ் கமிஷ்னர் சர்மா கைது செய்யாமல் பாதுகாத்து வந்துள்ள விவரம் வெளியாகியுள்ளதால் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். தெல்கியும் இப்போது சிறையில் தான் உள்ளான்.
இந்த விவகாரம் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது வெடிக்கலாம்.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஆர். பாலு பிறப்பித்துள்ள உத்தரவுகள், அதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் ஆகியவை தொடர்பாக அதிமுக, திமுக எம்.பிக்கள் இடையே மோதல் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications