ஜெ.வழக்கு: பெங்களூர் மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க பெங்களூர்-ஒசூர் நெடுஞ்சாலையில்உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாககர்நாடக சட்டம் மற்றும் பேரவை விவகாரத்துறை அமைச்சர் சந்திரேகெளடா கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டதையடுத்து,சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க பாதுகாப்பான இடத்தைக் கண்டறியும்படி, உள்துறை அமைச்சகம், பொதுப்பணித்துறை மற்றும் டிஜிபிக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.

அவர்களின் ஆலோசனையின் பேரில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைவளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பது என அரசு முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா இசட் பிரிவு பாதுகாப்பு பெற்றுள்ளவர். எனவே அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்படும்.

இந்த வழக்கிற்கு அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்கும்படி உயர் நீதிமன்றம் அரசைக் கேட்டிருந்தது. வழக்கறிஞர்ஒருவரை தேர்வு செய்யும் பொறுப்பு அட்வகேட் ஜெனரல் ஜெயராமிடம் தரப்பட்டுள்ளது.

அவரது சிபாரிசு கிடைத்ததும், சிறப்பு நீதிமன்றம் தொடர்பாக அரசின் முடிவுகள் குறித்து உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி ஜெயினுக்குத தெரிவிக்கப்படும். அரசு வழக்கறிஞரை நாங்கள் தேர்வு செய்தாலும் அதற்கு நீதிபதியின்சம்மதம் தேவை என்றார் அவர்.

மத்திய சிறைச்சாலை பெங்களூரின் மையப் பகுதியில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ளது. ஒசூர்நெடுஞ்சாலைக்கு அருகே எலெக்ட்ரானிக் சிட்டியை ஒட்டி இந்த சிறைச்சாலை அமைந்துள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சனை காரணமாக இரு மாநில உறவுகளும் சீர்கெட்டுள்ள நிலையில், சிறப்பு நீதிமன்றத்தைபெங்களூர் தவிர்த்து வேறு ஏதாவது கர்நாடக நகரங்களில் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யலாமா என கர்நாடக அரசு ஆலோசித்தது.

ஆனால் அட்வகேட் ஜெனரல் ஜெயராம், உச்ச நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்துவதுதான் முறை, மேல்முறையீடு செய்யக்கூடாது என்று முதல்வர் கிருஷ்ணாவுக்கு ஆலோசனை வழங்கிவிட்டதாகத் தெரிகிறது.அதன்பிறகு தான் இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் வழக்கு விசாரணையின்போது பெங்களூரில் எந்த ஒரு அசம்பாவிதமும் நேர்வதை அரசுவிரும்பவில்லை. எனவேதான் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில்சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஒசூர் வரை ஹெலிகாப்டரில் வந்துவிட்டு அங்கிருந்து கார் மூலம் ஜெயலலிதா இந்த நீதிமன்றத்துக்கு வந்து செல்லமுடியும்.

இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு எதிராக அரசு வழக்கறிஞர்களாக, கர்நாடகத்தின் மூத்த வழக்கறிஞர்களானசந்திரமெளலி அல்லது சதாசிவமூர்த்தி ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+