அரசு ஊழியர் விசாரணை: 12ம் தேதி இறுதி அறிக்கை தாக்கல்?
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களிடம் 3 நீதிபதிகள் நடத்திய விசாரணை குறித்த இறுதி அறிக்கை வரும் 12ம் தேதி அரசிடம் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தலைமைச் செயலகம் மற்றும் சென்னை மாவட்ட அரசு ஊழியர்கள் மீதான விசாரணை அறிக்கை கடந்த மாதம் அரசிடம் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 587 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள். மற்றவர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட தண்டனையுடன் மீண்டும் பணி வழங்கப்பட்டது.
இந் நிலையில் மற்ற மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான விசாரணை அறிக்கை வருகிற 12ம் தேதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையிலும், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந் நிலையில் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த புதிய விதிமுறைகள் மாநிலம்முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுதவிர சனிக்கிழமைகளில் அரசுஅலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை ரத்து செய்வது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாகத்தெரிகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications