எஸ்.டி.டி கட்டணம் 25% சதவீதம் குறைப்பு: பி.எஸ்.என்.எல் அறிவிப்பு
டெல்லி:
ஒரே தொலை தொடர்பு வட்டத்திற்குள் 100 கிலோ மீட்டருக்கு மேல் உள்ள இடங்களுக்கு சாதாரண தொலைபேசிமூலம் பேசுவதற்கான எஸ்.டி.டி கட்டணம் 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தனியார் செல்போன் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான திட்டங்களினால் மக்களிடம்சாதாரண தொலைபேசி மீதான ஆர்வம் குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 17.9 லட்சம் பேர் தங்களது லேண்ட் லைன் தொலைபேசிஇணைப்புகளை சரண்டர் செய்துள்ளனர். இதனால் முந்தைய ஆண்டை விட பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் லாபம்இந்த ஆண்டு 76 சதவீதம் குறைந்துள்ளது.
இதனையடுத்து வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள பி.எஸ்.என்.எல் நிறுவனம் பல புதிய கட்டணசலுகைகளை அறிமுகப்படுத்திவருகிறது. முதலில் ஐ.எஸ்.டி கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டது.
இப்போது ஒரே தொலை தொடர்பு வட்டத்தில் 100 கிலோ மீட்டருக்கு அதிகமான இடங்களுக்கு தொடர்புகொள்வதற்கான எஸ்.டி.டி கட்டணம் 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பி.எஸ்.என்.எல்நிர்வாக இயக்குனர் ப்ரிதிபால் சிங் டெல்லியில் அறிவித்தார்.
இதன்மூலம் இதுவரை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.20 பைசாவாக இருந்த எஸ்.டி.டி கட்டணம் இனி ரூ.1.80 பைசாவாககுறையும். வரும் 15ம் தேதி முதல் இந்த கட்டண சலுகை நாடு முழுவதும் அமலாகும்.
இந் நிலையில் தமிழகத்தில் சாதாரண தொலைபேசிச் சேவை அளித்து வரும் டச்டெல் என்ற தனியார் நிறுவனமும்இதே கட்டணச் சலுகையை அமல் செய்யும் என்று அந் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications