அரசு தரப்பில் ஆஜராக பிரபல கர்நாடக வழக்கறிஞர் மறுப்பு: ஜெவுக்கு வாதாட விருப்பம்
பெங்களூர்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராக பிரபலகிரிமினல் வழக்கறிஞர் நாகேஷ் மறுத்துள்ளார். அதே நேரத்தில் ஜெயலலிதா சார்பில் வாதாட விருப்பம்தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் அமைக்கப்படவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில்நடக்கவுள்ளது.
பெங்களூரில் எந்த இடத்தில் சிறப்பு நீதிமன்றத்தை அமைப்பது தொடர்பாக முடிவு எடுப்பதில் கர்நாடக அரசுகுழம்பித் தவித்து வருகிறது. மத்திய சிறை வளாகம், சிவில் நீதிமன்ற வளாகம் என மாற்றி, மாற்றி தனது முடிவைஅறிவித்து வந்த கர்நாடக அரசு இப்போது மீண்டும் மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைப்போம்என்று கூறியுள்ளது.
ஆனால், இதுவும் இறுதியான முடிவல்ல. இதனால் மீண்டும் இடம் மாறலாம் என்று தெரிகிறது.
இந்தக் குழப்பமே தீராத நிலையில் யாரை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிப்பது என்ற குழப்பமும் கர்நாடகஅரசை பிடித்து ஆட்டுகிறது. மாநிலத்தின் பிரபல வழக்கறிஞர்களை அரசு அணுகி வருகிறது. அவ்வாறுஅணுகப்பட்டவர்களில் ஒருவர் நாகேஷ்.
இவர் முன்னாள் கர்நாடக முதல்வர் பங்காரப்பா மீதான பல கோடி கம்ப்யூட்டர் ஊழல் வழக்கில் அவருக்குஆதரவாக வாதாடி வெற்றி தேடித் தந்தவர்.
இவரை ஜெயலலிதாவிற்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞராக வாதாடுமாறு கர்நாடக அரசு கோரியது. ஆனால்,இதற்கு நாகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வந்தால்,அவருக்காக வாதாடத் தயார் என்று அறிவித்துள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications