பொன்முடியிடம் வருமானத்தை மீறி ரூ. 3 கோடி சொத்து: 10,000 பக்க குற்றப் பத்திரிக்கை தாக்கல்
விழுப்புரம்:
திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி ரூ. 3 கோடிக்கும் அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச-ஊழல் தடுப்புப் போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டிடம்10,000 பக்க குற்றப் பத்திரிக்கையை போலீசார் சமர்பித்துள்ளனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் பொன்முடி உள்ளிட்ட திமுக தலைவர்களின் வீடுகளில் ஊழல் தடுப்பு போலீசாரைவிட்டு ரெய்ட் நடத்தியது. பலர் மீதும் வழக்குகள் பதிவாயின. இந்த ரெய்டுகள் இன்றளவும் தொடர்ந்துகொண்டுள்ளன.
இந் நிலையில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, மாமியார் சரஸ்வதி மற்றும் இருவர் ரூ. 3 கோடிக்குசொத்து சேர்த்துள்ளதாக விழுப்புரம் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளனர்.
இந்த 10,000 பக்க குற்றப் பத்திரிக்கையின் விவரம்:
பொன்முடியின் தந்தை சாதாரண பள்ளி ஆசிரியர். இவர்களது குடும்பத்திற்கே மொத்தம் 2 ஏக்கர் நிலம் தான்இருந்தது. பொன்முடியின் மாமனாரும் ஓய்வு பெற்ற சாதாரண ரயில்வே தொழிலாளி தான். இவர்களுக்கும் பூர்வீகசொத்துக்கள் இல்லை.
இந் நிலையில் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த பொன்முடி என்ற தெய்வசிகாமணி கடந்த1996ம் ஆண்டில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டுஎம்.எல்.ஏ. ஆனார்.
அப்போது இவருக்கு ரூ. 18 லட்சம் அளவுக்கே சொத்துக்கள் இருந்தன. 1996ம் ஆண்டு எம்.எல்.ஏ. ன கையோடுபோக்குவரத்துத்துறை அமைச்சரானார். 2001ம் ஆண்டு வரை அந்தப் பதவியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில்பொன்முடியின் சொத்து மதிப்பு மலைபோல் உயர்ந்தது.
விசால் எக்ஸ்போ. சிகா கல்வி அறக்கட்டளை, ஹீரோ ஹோணட ஷோரூம், கிராணைட் எக்ஸ்போர்ட், டிராக்டர்கள்வாடகை என தொழில்களை ஆரம்பித்து வருமானத்தை குவித்தார். அறக்கட்டளைக்காக 12 இடங்களில் 233 ஏக்கர்நிலம் வாங்கினார்.
சிகா மேல்நிலைப்பள்ளியை ரூ. 1.14 கோடியில் கட்டினார். இது தவிர ரூ. 1.02 கோடியில் இன்னொரு கட்டடமும்கட்டினார்.
விழுப்பரம் கரூர் வைஸ்யா வங்கியில் ரூ. 32 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். இந்தப் பணத்தை அரசு பஸ்ஊழியர்கள் 150 பேர் கொடுத்தாக கூறியுள்ளார். இதை அந்த ஊழியர்கள் போலீசாரிடம் மறுத்துள்ளனர். வங்கிபடிவத்தைக் காட்டி அமைச்சர் கையெழுத்து கேட்டதாகவும், கேட்ட இடத்தில் கையெழுத்து மட்டுமேபோட்டதாகவும் மற்றபடி பணம் தரவில்லை என்றும் கூறியுள்ளனர்.
அமைச்சரான பின் பொன்முடியின் சொத்து மதிப்பு ரூ. 4.10 கோடியாகிவிட்டது. இதில் பல்வேறு வழிகளில் வந்தவருமானமாக ரூ. 2.21 கோடிக்கு பொன்முடி போலீசாரிடம் கணக்குக் காட்டினார். மேலும் ரூ. 1.38 கோடியைசெலவுக் கணக்காகவும் காட்டினார்.
அவர் காட்டிய கணக்குகளின்படி அவரிடம் ரூ. 3.08 கோடி சொத்து அதிகமாக இருப்பு உள்ளது. இதற்கானகணக்குகளை அவரால் காட்ட முடியவில்லை. இதை அவர் லஞசமாகவே சம்பாதித்துள்ளார்.
இவ்வாறு அந்தக் குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதே போல திமுக மாஜி அமைச்சர் ஜெனீபர் சந்திரன், திண்டுக்கல் பெரியசாமி ஆகியோர் மீதும் நேற்று குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே அந்தியூர் செல்வராஜ் மற்றும் சமயநல்லூர் செல்வராஜ் ஆகியோர் மீது குற்றப் பத்திரிக்கைகள்தாக்கலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்னொரு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது முதல்வர் ஜெயலவிதாவை தரக்குறைவாகப் பேசியதாக அவதூறு வழக்கு ஒன்றையும் போலீசார் நேற்று முன்தினம் பதிவு செய்துள்ளனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications