டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் வேறு துறைக்கு மாற்றம்
சென்னை:
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் எதுவும் நடைபெறாததால்,தேர்வாணைய ஊழியர்களில் பெரும்பாலானவர்களை வேறு துறைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பிறகு அரசுத் துறைக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதை நிறுத்திவிட்டார். மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளும் நடைபெறவில்லை. இதனால் கடந்தஇரண்டு ஆண்டுகளாகத் தேர்வாாணையத்தில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
இதன் காரணமாக தேவைக்கு அதிகமான ஊழியர்கள் அதிக அளவில் தேர்வாணையத்தில் உள்ளனர். இவர்களைவேறு துறைகளுக்கு மாற்ற அரசுமுடிவு செய்துள்ளது. மேலும் தேர்வாணையத்தில் தற்போது உள்ள75பிரிவுகளுக்குப் பதிலாக 50 துறைகளாக குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
வேறு துறைகளுக்கு மாற்றப்பட உள்ள ஊழியர்களிடம் எந்தத் துறைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்றும்ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. அவர்கள் விருப்பம் தெரிவித்த பின்னர் அத் துறைகளுக்கு அவர்கள் விரைவில்மாற்றப்படுவர்.












Click it and Unblock the Notifications