ரஷிய நிறுவன புகார்: சிபிஐ விசாரணை கோருகிறார் ராமதாஸ்
திண்டிவனம்:
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான டெண்டர் விடப்பட்டதில் நடந்துள்ள குளறுபடி குறித்து சிபிஐவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தனது தைலாபுரம் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரூ.1500 கோடி மதிப்பிலான கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில்,டெண்டர் விடப்பட்டதிலேயே பெரும் குளறுபடிநேர்ந்துள்ளது.
ரஷிய நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. அத்தோடு தமிழக அரசு அதிகாரிகள் ரஷியாவுக்குப் போன் செய்துலஞ்சம் கேட்டதாகவும் அது நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. எனவே இது தொடர்பாகசிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் எல்லைக்குள் நாகப்பட்டனம், பெரம்பலூர் மாவட்டங்களையும்சேர்த்துள்ளனர். இவை இரண்டும் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள்தான் இருக்க வேண்டும்என்றார் அவர்.












Click it and Unblock the Notifications