டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் வேறு துறைக்கு மாற்றம்
சென்னை:
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் எதுவும் நடைபெறாததால்,தேர்வாணைய ஊழியர்களில் பெரும்பாலானவர்களை வேறு துறைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற பிறகு அரசுத் துறைக்கு ஊழியர்கள் சேர்ப்பதையே ஒட்டுமொத்தமாகநிறுத்தி விட்டார். இதனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளும் நடைபெறவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் தேர்வாாணையத்திற்கு வேலையே இல்லை. தினமும் ஊழியர்கள் சும்மாஅலுவலகம் வந்துவிட்டுத் திரும்பி வருகின்றனர்.
இதையடுத்து இந்த ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கூண்டோடு வேறு துறைகளுக்கு மாற்ற அரசு முடிவுசெய்துள்ளது. மேலும் தேர்வாணையத்தில் தற்போது உள்ள75 பிரிவுகளை சுருக்கி 50 துறைகளாகக் குறைக்கவும்அரசு முடிவு செய்துள்ளது.
வேறு துறைகளுக்கு மாற்றப்பட உள்ள ஊழியர்களிடம் எந்தத் துறைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்றும்ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. அவர்கள் விருப்பம் தெரிவித்த பின்னர் அத் துறைகளுக்கு அவர்கள் விரைவில்மாற்றப்படுவர்.
இந்த மாற்றங்களுக்குப் பின் டி.என்.பி.எஸ்.சியில் மிகக் குறைவான ஊழியர்களே இருப்பார்கள்.
சமீபத்தில் தான் தாற்காலிக ஊழியர்களை அரசு தனது ஒயின்ஷாப்களுக்கு மாற்றியது என்பது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications