நாடாளுமன்ற கூட்டம்: வைகோ மனு உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைப்பு
சென்னை:
பொடா சட்டம் குறித்த விவாதத்தில் பங்கேற்க நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி கோரி மதிமுகபொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 15ம் தேதிக்கு(திங்கள்கிழமைக்கு) சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது.
பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்ட மசோதா மீது நாடாளுமன்றத்தில்விவாதமும் ஓட்டெடுப்பும் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள தன்னை அனுமதிக்குமாறு கோரி பூந்தமல்லிபொடா நீதிமன்றத்தில் வைகோ மனு செய்தார். ஆனால் அந்த மனுவை பொடா நீதிபதி ராஜேந்திரன் நிராகத்துவிட்டார்.
மனுவை நீதிபதி ராஜேந்திரன் தள்ளுபடி செய்தபோது, அவரை நோக்கி வணங்கிய வைகோ, தீர்ப்புக்காக நன்றிசொல்வதாகக் கூறிவிட்டு வெளியே வந்தார்.
இதையடுத்து நேற்று மாலையே உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ சார்பில் மேல் முறையீட்டுமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் அவசரம் கருதி, விடுமுறை தினமாக இருந்தாலும், அதை இன்றேவிசாரிக்க தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை நீதிபதி குலசேகரன் முன்னிலையில், வைகோவின் மனு விசாரணைக்கு வந்தது.அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், பொடா மசோதா மீதான விவாதம்திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற வாய்ப்பில்லை. எனவே இந்த மனுவை அவசரமாக விசாரிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இதற்கு வைகோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் நாளைக்குள், வைகோவின் மனுவுக்கு பதில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
இடையில் அவசியம் ஏற்பட்டாலோ, நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்தாலோஅதை இரு தரப்பினரும் உடனடியாக எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனால் வைகோ 15ம் தேதி டெல்லி செல்வதில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.
மதிமுகவினர் மீது தடியடி:
முன்னதாக பொடா நீதிமன்றம் வைகோவின் கோரிக்கையை நிராகரித்த பின்னர் நீதிமன்றத்தின் வெளியேமதிமுகவினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்படவே போலீசார்மதிமுக தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். பின்னர் தமிழரசு என்ற தொண்டரை கைது செய்து பொடாநீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அவருக்கு நீதிமன்றம் உடனடியாக ஜாமீன் வழங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications