நாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரும் வைகோ மனு மீது இன்று தீர்ப்பு
சென்னை:
நாடாளுமன்றத்தில் இன்று நடக்கவுள்ள பொடா சட்டம் குறித்த விவாதத்தில் கலந்து கொள்ள அனுமதி கோரிமதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
நேற்று அரசுத் தரப்பு மிகவும் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததால் இந்த வழக்கில் தீர்ப்பு தாமதமாகியுள்ளது.
பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இன்றும்நாளையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கோரி பொடாநீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை மாலை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வைகோ உடனே மேல் முறையீடு செய்தார். இது அவசர மனு என்பதால்விடுமுறை தினமான சனிக்கிழமையே வழக்கை நீதிபதி குலசேகரன் விசாரித்தார். அப்போது பொடா சட்டத்தின் மீதுதிங்கள்கிழமை விவாதம் நடக்கப் போவதில்லை என அரசுத் தரப்பில் பதில் சொல்லப்பட்டது.
இதனால் இதை அவசரமாக விசாரிக்க வேண்டியதில்லை என அரசு வழக்கறிஞர் கூறினார்.
இதையடுத்து வைகோவின் மனுவுக்கு நேற்றைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகுலசேகரன் உத்தரவிட்டார். தீர்ப்பை திங்கள்கிழமை வழங்குவதாகக் கூறினார். அதே நேரத்தில் அவசரம்ஏற்பட்டால் இரு தரப்பினரும் வீட்டில் வந்து முறையிடலாம் என்றும் அவர் கூறியிருந்தார்
இந் நிலையில் பொடா சட்ட மசோதா மீது திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் நாடாளுமன்றத்தில் விவாதம்நடக்கும் என மத்திய அரசு அறிவித்தது.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வைகோவுக்கு அனுப்பிய கடிதத்தின்நகலைக் காட்டி வைகோ மனுவை அவசரமாக விசாரிக்குமாறு நீதிபதி வீட்டிற்குச் சென்று மதிமுக வழக்கறிஞர்கள்முறையிட்டனர்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அரசு தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரனிடம் சென்று பதில் மனுவை வாங்கிவருமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து மதிமுக வழக்கறிஞர்கள் என்.ஆர்.சந்திரனின் வீட்டிற்குச் சென்று நீதிபதியின் உத்தரவைதெரிவித்தனர். அதற்கு அவரும் பதில் மனுவை விரைவில் தாக்கல் செய்வதாக பதில் கூறினார்.
ஆனால், நேற்று மாலை வரை அவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. நேற்று இரவு தான் அரசின் பதில் மனுநீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பொடா சட்டத்தின் கீழ் மனுதாரர் சிறையில் உள்ளார். எனவே அவர் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க முடியாது. வைகோ எம்.பி. என்பதால் அவருக்கு விசேஷ சலுகைகள் வழங்க முடியாது. மற்றகைதிகளுக்கு என்ன சலுகைகள் உள்ளதோ அதுதான் வைகோவுக்கும் வழங்க முடியும்.
பொடா சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பின்பே வைகோ வெளியில் செல்ல முடியும். டெல்லிக்கு செல்லபொடா நீதிமன்றம் அனுமதிக்க மறுத்ததை எதிர்த்து வைகோ அங்கேயே மேல் முறையீடு செய்யவில்லை. உயர்நீதிமன்றத்தில் தனி மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ராஜ்யசபா தேர்தலிலும், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலிலும் வைகோ கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டதைஇப்போது முன்னுதாரணமாக கொள்ள முடியாது. அது ஒரு சலுகை. அதை எப்போதும் எதிர்பார்க்க முடியாது.எனவே வைகோவை டெல்லி செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று காலை நடக்கிறது. தீர்ப்பும் காலையே வழங்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.அப்போது வைகோ டெல்லி செல்ல முடியுமா இல்லையா என்பது குறித்துத் தெரிய வரும்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications