உணவில் மயக்க மருந்து கலந்து பிடிக்கப்பட்ட சதாம்
பாக்தாக்:
சதாம் ஹூசேனை அமெரிக்கப் படைகள் பிடிக்கவில்லை என்றும், குர்து இன பழங்குடியினர் தான் பிடித்துஅமெரிக்கப் படைகளிடம் ஒப்படைத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சதாம் ஹூசேனின் ஆட்சி காலத்தில் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட குர்து இனத்தினரின் படைகள் தான் அவரதுஇருப்பிடத்தை ஒரு உளவாளி மூலம் அறிந்ததாகவும், இதையடுத்து அவரது உணவில் மயக்க மருந்து கலந்துசெயலிழக்க வைத்து அமெரிக்கப் படைகளின் வசம் ஒப்படைத்தாக பிரிட்டிஷ் உளவுப் பிரிவுகள்தெரிவித்துள்ளன.
சதாமின் சமையல்காரரை மடக்கி உணவில் மயக்க மருந்தை கலந்து சதாமுக்குக் கொடுத்த பின்னரே அவரைப்குர்துப் படைகள் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. நேரடியாக அவரைப் பிடிக்கச் சென்றிருந்தால் துப்பாக்கியால்சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்பதால் உணவில் மயக்க மருந்து கலக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சதாமின் இருப்பிடம் குறித்து குர்து இனத்தினருக்குத் தகவல் தந்த உளவாளிக்கு அமெரிக்கா அறிவித்துள்ள ரூ.150 கோடி பரிசுப் பணம் தரப்படலாம் என்றும் அந்த நாளிதழ் தெரிவிக்கிறது.
அமெரிக்கர் முகத்தில் துப்பிய சதாம்:
அமெரிக்கப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது தன்னைப் பிடித்த அமெரிக்க வீரரின் முகத்திலும்துப்பியுள்ளார் சதாம் என்றும் பிரிட்டிஷ் உளவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந் நிலையில் அமெரிக்கப் பிடியில் உள்ள சதாம் ஹூசேனை சந்தித்துவிட்டு வந்த ஈராக்கின் நிர்வாக கவுன்சின்தலைவர் அஹமத் சலாபி, அமெரிக்காவின் டைம்ஸ் இதழக்கு அளித்துள்ள பேட்டியில்,
கைது நடவடிக்கையின்போது அமெரிக்கப் படை வீரர் ஒருவரின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளார் சதாம்.கைதுக்குப் பின் நடந்த விசாரணையில் சரியான முறையான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
இப்போதும் அதிபர் நான்தான் என்றும், அதிபருக்கு உரிய மரியாதையுடன் என்னிடம் நீங்கள்பேச்சுவார்த்தைதான் நடத்த வேண்டுமேயொழிய, விசாரணை நடத்தக் கூடாது என சதாம் கூறினார்.
அவர் திருந்தியதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் அஹமத் சலாபி.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications