பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்கும்: ராமதாஸ் அறிவிப்பு
சென்னை:
பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து நீடிக்கும்என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகியதைத் தொடர்ந்து மதிமுகமற்றும் பா.ம.க.வின் நிலை குறித்து கேள்வி எழுந்தது. இந் நிலையில் சென்னையில் பா.ம.க.வின் உயர் மட்டக்குழுக் கூட்டம் நடந்தது.
காலை முதல் மாலை வரை நடந்த ஆலோசனைக்குப் பின் மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராமதாஸ்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவர் செய்தியாளர்கள் மத்தியில் வாசித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது பொது செயல் திட்டத்திலிருந்து விலகாமல்ஆட்சி நடத்தி வருகிறது. தனது சகோதர அமைப்பின் (ஆர்.எஸ்.எஸ்.) நெருக்குதல்களுக்கு அடிபணியாமல், தனதுசொந்த கொள்கையையே விட்டுக் கொடுத்து செயலாற்றி வருகிறது.
இருப்பினும் காவிரிப் பிரச்சினை, தமிழை ஆட்சி மொழியாகவும், செம்மொழியாகவும் அறிவிப்பது, தனியார்துறையில் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடுக்கு அரசியல் சட்ட பாதுகாப்பு கொடுப்பது போன்றவற்றில் பா.ஜ.க.வின்நடவடிக்கைகள் எங்களுக்குத் திருப்தி தரவில்லை.
இருப்பினும் இந்தப் பிரச்சினைகளை பிரதமர் வாஜ்பாய் தலையிட்டு வேகமாக தீர்த்து வைப்பார் என்றநம்பிக்கையின் அடிப்படையில், அவரது தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும், தேசிய ஜனநாயகக்கூட்டணியிலும் நீடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்க விரும்பவில்லை. இவற்றை ஒரு மாதத்தில் கூடநிறைவேற்றலாம். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளது. அதற்கு முன்பே கூட தேர்தல் வரலாம் என்கிறார்கள்.எனவே தேர்தலுக்குக் கடைசி நிமிடம் வரை கோரிக்கைகளை நிறைவேற்ற அவகாசம் உள்ளது.
திமுகவின் நிலை குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதிதிட்டவட்டமாகக் கூறி விட்ட பிறகு அது குறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை. திமுக விலகியுள்ளதால்கூட்டணியில் அதிமுக சேருமா என்ற கேள்வி தற்போது எழவில்லை.
பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது. இதற்கு மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழ் உள்ளிட்ட 18 மொழிகளை மத்தியில் ஆட்சி மொழியாக அறிவிக்க உயர் மட்டக் குழு அமைக்கப்படும்என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியை வளர்க்கஎடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்ற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
அனைத்துக் கட்சிகளும் எதிர்பார்த்தது போலவே பாமக தனது முடிவை அறிவித்துள்ளது. இருப்பினும் மதிமுகஎன்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications