மதிமுகவும் விலகியது: 2 அமைச்சர்களும் நாளை ராஜினாமா
சென்னை:
திமுகவைப் பின்பற்றி மதிமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. இதையடுத்து அக்கட்சியின் சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன்ஆகியோர் நாளை பதவி விலகுகின்றனர்.
பொடா சட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பா.ஜ.க.அமைதி காத்து வந்ததாலும், திமுகவின் கோரிக்கைகளை ஏற்காமல் அலட்சியம் செய்து வந்ததாலும், மாநில பா.ஜ.கதலைவர்கள் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததாலும் கூட்டணியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும்விலகுவதாக பத்து நாட்களுக்கு முன் திமுக அறிவித்தது.
ஆனால் மற்றொரு முக்கிய கட்சியான பாமக கூட்டணியிலிருந்து விலக மாட்டோம் என்று கூறி விட்டது.
இந் நிலையில் இன்று மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும்நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் 34 மாவட்டசெயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டணியில் இருந்து விலகிவிட வைகோ முடிவு செய்திருப்பதை கணேசனும் அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சிராமச்சந்திரன் ஆகியோரும் அறிவித்தனர். இதனை மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் கரகோஷம் எழுப்பிவரவேற்றனர்.
இதையடுத்து கூட்டணியில் இருந்து விலகிவிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்துவேலூர் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்திக்கும் கண்ணப்பனும் ராமச்சந்திரனும் இன்று மாலை டெல்லிசெல்கின்றனர்.
நாளை தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமர் வாஜ்பாயிடம் அளிக்கவுள்ளனர்.
வைகோவையும் சேர்த்து மதிமுகவுக்கு நான்கு எம்.பிக்கள் உள்ளனர்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications