மதிமுகவையும் காங். கூட்டணியில் சேர்க்க வாசன் விருப்பம்
சென்னை:
தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணி அமைய நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுகவும், மதிமுகவும் தேசிய ஜனநாயகக்கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது வரவேற்கத்தக்கது.
இதன் மூலம் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது மக்கள் விரும்பும்கூட்டணியாக அமையும். இதில் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையும் அகில இந்திய காங்கிரஸ்தலைமையும் இதை உணர்ந்து புதிய கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
பா.ம.கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினால் அவர்களையும் கூட்டணியில் சேர்ப்பதுகுறித்து நிச்சயம் பரிசீலிப்போம்.
சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று பா.ஜ.கவினர் கூறுவது அநாகரிகமானது என்று திமுக தலைவர்கருணாநிதி தெரிவித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். காங்கிரஸ் மீது குற்றம் சொல்ல ஒன்றும் இல்லாதகாரணத்தால்தான் சோனியா காந்தி மீது சேற்றை வாரி வீசி, மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறது பா.ஜ.க. என்றார்வாசன்.
வாசனின் இந்தக் கருத்து மதிமுகவையும் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற அவரதுவிருப்பத்தையே காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications