சிறந்த தமிழன் போட்டி முடிவுகள்
அன்புள்ள வாசகர்களே,
இந்த ஆண்டு நாம் நடத்திய சிறந்த தமிழனுக்கான போட்டியிலும், சிறந்த திரைப்பட சாதனையாளர் போட்டியிலும் மிக ஆர்வமுடன்பங்கெடுத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கனக்கில் வாக்களித்திருக்கிறீர்கள்.
பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஜனாதிபதி அப்துல் கலாம், விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்ஆகியோரையும் பட்டியலில் சேர்க்குமாறு வற்புறுத்தியதால் அவர்களது பெயர்களையும் இடம் பெறச் செய்தோம்.
மேலும் பலர் திமுக தலைவர் கருணாநிதி, சந்தனக் கடத்தல் வீரப்பன், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, துக்ளக் ஆசிரியர்சோ. ராமசாமி, மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும்தோழர்கள், அப்பாவித் தமிழன், புள்ளிராஜா, பான்யான் அமைப்பை நிறுவிய வந்தனா, வைஷ்ணவி, இலங்கை கிரிக்கெட் அணியின் தமிழ்வீரர் முத்தையா முரளீதரன், சரவண பவன் அண்ணாச்சி ராஜகோபால், நீதிபதி கற்பக விநாயகம், கஞ்சா வழக்கில் சிக்கவைக்கப்பட்ட ஜனனி ஆகியோரையும் சேர்க்கச் சொல்லி பரிந்துரைத்தனர்.
ஆனால், ஜனாதிபதி கலாமுக்கும், புலிகள் தலைவர் பிரபாகரனுக்குமே மிக அதிக அளவில் பரிந்துரைகள் வந்ததால் அவர்களைச்சேர்த்தோம்.
நேற்றிரவு முடிவடைந்த இந்த வாக்குப் பதிவில், உங்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி கண்டுள்ளவர் மதிமுகபொதுச் செயலாளர் வைகோ தான். இவர் 52 சதவீத வாசகர்களின் வாக்குகளை வென்றுள்ளார்.
16 சதவீத வாக்குகளைப் பெற்று அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவர் முதல்வர் ஜெயலலிதா.
கடைசி நேரத்தில் பெயர் சேர்க்கப்பட்டாலும் 9 சதவீத வாக்குகளைப் பிடித்தவர் புலிகள் தலைவர் பிரபாகரன்.
அவரைப் போலவே கடைசியில் பெயர் சேர்க்கப்பட்ட ஜனாதிபதி அப்துல் கலாம் 7 சதவீத வாக்குகளையும், இயக்குனர் பாலா 7சதவீத வாக்குகளையும், காஞ்சி மடாதிபதி சங்கராச்சாரியார் 5 சதவீத வாக்குகளையும், விடுதலைச் சிறுத்தைகள் இயக்க பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் 4 சதவீத வாசகர்களின் வாக்குகளையும் வென்றுள்ளனர்.
வாக்கு விவர வரைபடம்:
![]() |
ஆர்வமாய் வாக்கெடுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி !
அன்புடன்
ஆசிரியர்
தட்ஸ்தமிழ்.காம்
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?













Click it and Unblock the Notifications