மகாவீர் ஜெயந்திக்கு விடுமுறை வேண்டும்: ஜைனர்கள் கோரிக்கை
சென்னை:
மகாவீர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக மீண்டும் அறிவிக்க வேண்டும் என்று ஜைன மதத்தினர் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு விடுமுறை நாட்கள் 22லிருந்து 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1 உள்ளிட்ட பல விடுமுறை நாட்கள் ரத்து செய்யப்பட்டு பணி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மகாவீர் ஜெயந்தி, தெலுங்குப் புத்தாண்டு ஆகியவை சில.
மகாவீர் ஜெயந்தி நாளை மீண்டும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று ஜைன மதத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஜைன மதத்தினர் நடத்தும் கல்வி நிறுவனங்களின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதங்களில், 2004ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களின் பட்டியலில் மகாவீர் ஜெயந்தி இடம் பெறவில்லை. ஆனால், கிறிஸ்தவ மதத்தினரின் 2 பண்டிகைகளுக்கும், இஸ்லாமியர்களின் 2 பண்டிகைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜைன மதத்தினரின் குருவான பகவான் மகாவீர் அவதரித்த ஏப்ரல் 3ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்படாதது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. எனவே கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஏப்ரல் 3ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று அவற்றில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீராஜஸ்தானி ஜெயின் சமாஜம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் சார்பில் இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications