அமைச்சர் பதவி பறிப்பு: ரஷிய நிறுவனத்திடம் நடத்தப்பட்ட லஞ்ச பேரம் வெளியானதே காரணம்?
சென்னை:
உள்ளாட்சித்துறை அமைச்சர் சம்பத்தின் பதவி பறிக்கப்பட்டதற்கு, ரஷ்ய நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட விவகாரம்வெளியுலகுக்குத் தெரிய வந்ததே முக்கிய காரணம் என்று தெரிகிறது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் சம்பத் மற்றும் உணவுத் துறை அமைச்சர் மோகன் ஆகியோரது பதவிகள் திடீரெனநேற்று முன்தினம் பறிக்கப்பட்டன.
கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கான டெண்டர் விடுவதில், ரஷிய நிறுவனத்திடம் சம்பத்தின்அலுவலகத்திலிருந்து இருந்து லஞ்ச பேரம் பேசியது நீதிமன்றம் வரை போனதே, சம்பத்தின் பதவிபறிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
அதிலும் லஞ்சப் பேரம் நடத்தியது தொடர்பான அனைத்து விஷயங்களும் வீடியோவில் பதிவில்செய்யப்பட்டுள்ளது, உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் வீடியோ டேப் சமர்பிக்கப்படும் என்று ரஷிய நிறுவனம்தெரிவித்துள்ளது. இதனால் தான் சம்பத்தின் தலை உருட்டப்பட்டதாகத் தெரிகிறது.
இது தவிர, பிரச்சனைகள் நிரம்பிய உள்ளாட்சித் துறையை சம்பத்தால் ஆரம்பத்தில் இருந்தே திறமையாக நிர்வகிக்கமுடியவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன், ஊராட்சிகளுக்கு ஒதுக்க வேண்டியநிதியைத் தரக் கோரி, உள்ளாட்சித் தலைவர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் சம்பத்தைச் சந்திக்க வந்தனர்.
நெடுநேரம் காத்திருந்தும் அமைச்சரைச் சந்திக்க முடியாததால் வெறுப்படைந்த அவர்கள்,பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, அரசு மீது தங்களுக்குள்ள குறைகளைத் கொட்டித் தீர்த்துவிட்டு, நிதி ஒதுக்கீடில்அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டினால் 7,000 ஊராட்சித் தலைவர்களும் ஒட்டுமொத்தம் ராஜினாமாசெய்யப்போவதாகவும், கோட்டையை நோக்கி ஊர்வலம் போகப்போகவதாகவும் எச்சரித்தனர்.
இதனால் முதல்வரின் கோபம் மேலும் அதிகரித்தாகத் தெரிகிறது.
சம்பத்தின் பதவி பறிக்கப்பட்டதற்கான காரணத்தைச் சொல்லாத ஜெயலலிதா, மோகனின் பதவி பறிக்கப்பட்டதற்குமட்டும் காரணத்தைக் கூறியுள்ளார். கொளப்பாக்கத்தில் நடக்கும் அதிமுக நிர்வாகிகள் நேர்காணலில் பேசியஜெயலலிதா,
ஒரு அமைச்சரின் (மோகன்) பதவி பறிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை இங்கு கூறுகிறேன். அவரது(மோகனின்) தம்பி திமுகவில் ஒன்றிய செயலாளர் தேர்தலில் போட்டியிடுகிறாராம். அதற்கான வேலைகளைக்கவனிக்குமாறு அதிமுக தொண்டர்களை அவர் ஏவியுள்ளார். மறுத்தவர்களை அடியாட்கள் வைத்து அடித்தும்,பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தும் துன்புறுத்தியுள்ளார் என்றார் ஜெயலலிதா.
முன்னதாக மோகன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கடலூர் மேற்கு, கடலூர் கிழக்கு, விழுப்புரம் மாவட்டச்செயலாளர்களை போயஸ் தோட்டம் வரவழைத்து, ஜெயலலிதா விசாரித்துள்ளார். விசாரணையில் மோகன் மீதுமாவட்டச் செயலாளர்கள் அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுக்களை அடுக்க அவரை பதவி நீக்கம் செய்யும் முடிவுக்குவந்துள்ளார் ஜெயலலிதா.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications