காங்கிரசுக்கு கண்ணன் புதிய நிபந்தனை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய புதுவை கண்ணனிடம், காங்கிரஸ் மேலிடத்தின் மூலம் சமரசப் பேச்சுவார்த்தைநடந்து கொண்டிருப்பதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

சேலம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுவையில் தற்போது எந்தவித அரசியல் நெருக்கடியும்ஏற்பட்டு விடவில்லை.

கட்சியிலிருந்து விலகியுள்ள கண்ணணுடன் கட்சி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப்பிரச்சினையால் காங்கிரஸ் அரசு கவிழாது, ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றார்.

புதுவை பிராந்திய காங்கிரஸ் பொறுப்பாளரான அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத்,தொலைபேசி மூலம் கண்ணனுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைகண்ணனின் ஆதரவாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில் முதல்வர் ரங்கசாமியை மாற்றிவிட்டு தனது ஆதரவாளரான வைத்தியலிங்கத்தை முதல்வராக்கவேண்டும் என கண்ணன் அவர்களிடம் நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரங்கசாமியை மாற்றினால்தான் மீண்டும் காங்கிரசுக்கு வருவேன் என கண்ணன் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

பா.ஜ.கவில் கண்ணன்?

இந் நிலையில் புதுவை காங்கிரஸிலிருந்து விலகியுள்ள ப.கண்ணன் பாரதீய ஜனதாக் கட்சியில் சேருவதற்கானசூழ்நிலை தற்போது இல்லை என்று அகில இந்திய பா.ஜ.க.செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதுவையில் நிலைமை இன்னும் குழப்பமாகவே உள்ளது.இருப்பினும்,யார் வேண்டுமானாலும் பா.ஜ.க.வில் சேரலாம். வாஜ்பாய் தலைமையை ஏற்கும் யாரையும் நாங்கள்வரவேற்போம்.

அதிமுக தேர்தல் குழுவுடன் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பா.ஜ.க. தேர்தல் குழுவினர் சந்தித்து தொகுதிப்பங்கீடு குறித்துப் பேசுவார்கள். எத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிடப்போகிறோம் என்பதை இப்போதுகூறுவதற்கில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுகதான் எங்களது கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறது. எனவே இந்தக்கூட்டணியில் சேர விரும்பும் சிறு கட்சிகள், எங்களை அணுகுவதற்குப் பதில் அதிமுகவைத்தான் அணுக வேண்டும்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+