அத்வானிக்கு இன்று ஜெ. விருந்து
சென்னை:
இன்று சென்னை வரும் துணைப் பிரதமர் அத்வானிக்கு முதல்வர் ஜெயலலிதா விருந்து கொடுக்கிறார். அப்போதுவரும் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து இருவரும் பேச்சு நடத்தவுள்ளனர்.,
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒரு விழாவில் பங்கேற்க வரும் அத்வானிக்கு தனது போயஸ் கார்டன்இல்லத்தில் இந்த இரவு விருந்தை அளிக்கிறார் ஜெயலலிதா.
அதிமுக-பாஜக குழுக்கள் சந்திப்பு:
இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் பா.ஜ.க. தேர்தல் குழுக்கள்நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தின.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தேர்தல் குழுவும்,சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பா.ஜ.க. தேர்தல் குழுவும் இன்று சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ளஅதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசின.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தக் கூட்டம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசியராதாகிருஷ்ணன், பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. மீண்டும் ஓரிரு நாட்களில் சந்திக்கவுள்ளோம். அதற்குப்பிறகுதான் தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்றார்.
அதிமுக பொதுக் குழு தேதி மாற்றம்:
இதற்கிடையே அதிமுக பொதுக் குழு, செயற்குழுக் கூட்டங்கள் பிப்ரவரி 3ம் தேதிக்குப் பதிலாக 4ம் தேதி மாலைநடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக நிர்வாகிகளுடன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சென்னையை அடுத்த கொளப்பக்காத்தில் நேர்காணல்நடத்தினார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து வரும் பிப்ரவரி 3ம் தேதி கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார்.
இக் கூட்டத்தில் பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றிய அறிவிப்பையும் ஜெயலலிதா வெளியிடுவார்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் இக் கூட்டத்தை 4ம் தேதிக்கு ஜெயலலிதா ஒத்தி வைத்துள்ளார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications