ஜெ. தலைமையில் தமிழகம் பெரும் வளர்ச்சி: வாஜ்பாய் ஐஸ் மழை
கன்னியாகுமரி:
ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகம் மிகப் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. அவருடனான கூட்டணியைநாங்கள் மிகவும் மதிக்கிறோம், பெருமைப்படுகிறோம் என பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
போயஸ் கார்டனில் நேற்று துணைப் பிரதமர் அத்வானி விருந்து சாப்பிட்டுவிட்டுப் போயுள்ள நிலையில் இன்றுகன்னியாகுமரி வந்தார் பிரதமர் வாஜ்பாய். நாட்டின் கன்னியாகுமரி-காஷ்மீரை இணைக்கும் தங்க நாற்கர தேசியநெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற அவர் பேசுகையில்.
முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் தமிழகம் சமூக-பொருளாதாரரீதியில் மிகப் பெரும் வளர்ச்சிஅடைந்துள்ளது. ஜெயலலிதாவுடனான கூட்டணியை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.மாநிலத்தின் வளர்ச்சிக்காகஅவர் அரும்பாடுபட்டு வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜெயலலிதா உடனடியா ஒப்புக் கொண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.கடந்த 5 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகச் சிறந்த அரசை வழங்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பைஉறுதி செய்துள்ளது. ஸ்திமான அரசைத் தந்துள்ளது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளது.
இன்று உலக அளவில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் இந்தியாவும் ஒனறாகத்திகழ்கிறது. இந்த நெடுஞ்சாலைத் திட்டமும் எங்கள் அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நாற்கர சாலைப் பணிகள் மிகவேகமாக நடந்து வருன்றன. அதே போல நாட்டின் அனைத்து மாநில தலைநகர்களையும் இணைக்கும் 10,000கி.மீ. தூர நெடுஞ்சாலையும் உருவாக்கப்படும்.
சாலைகள் நம் கையின் ரேகைகள் மாதிரி. அவை தான் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்றார்.
இதற்கு முன் தமிழகத்தில் வாஜ்பாயின் நிகழ்ச்சிகளை முடிந்தவரை புறக்கணித்து வந்த ஜெயலலிதா முதன் முறையாகஇன்று அவருடன் மேடையேறினார். இதையடுத்து வாஜ்பாயும் முடிந்தவரை இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவைப்பாராட்டிவிட்டுப் போனார்.
இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட பா.ஜ.க.- அதிமுக தேர்தல் கூட்டணியின் முதல் கூட்டமாகவே நடந்து முடிந்தது.
இதையடுத்து நாகர்கோவிலில் நடந்த பிரம்மாண்டமான பா.ஜ.க. தேர்தல் பொதுக் கூட்டத்தில் வாஜ்பாய்உரையாற்றினார். அவர் கூறியதாவது:
தொலைத் தொடர்பு, சாப்ட்வேர், சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து என அனைத்துத் துறைகளிலும்தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் சாதனைகளைப் படைத்துள்ளது. இன்று நான் தொடங்கி வைத்தநெடுஞ்சாலைப் பணி காஷ்மீரையும் கன்னியாகுமரியையும் வெறுமனே பூமி மீது இணைக்கும் சாலையல்ல. இதுவடக்கையும் தெற்கையும் இதயங்களால் இணையச் செய்யும் முயற்சி.
இன்று சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் தொலைபேசிகள் கிடைக்கச் செய்திருக்கிறோம். விவசாயி, மீனவர்என அனைவராலு செல்போன் வாங்கும் அளவுக்கு நாட்டை வளர்ச்சியடையச் செய்திருக்கிறோம். அடுத்தகட்டமாக உள்ளடங்கிய அனைத்து கிராமங்களுக்கும் சாலைகளை அமைப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications