எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் திருமாவளவன்
சென்னை:
திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்ட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயாலாளரானதிருமாவளவன், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமாசெய்துள்ளார்.
சட்டசபைக்குச் சென்று சபாநாயகர் காளிமுத்துவைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை திருமாவளவன்கொடுத்தார்.
2001ம் ஆண்டு நடந்த, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் தனித் தொகுதியில் திமுககூட்டணி சார்பில் போட்டியிட்டார் திருமாவளவன். திமுக சின்னத்திலேயே நின்ற அவர் வெற்றியும் பெற்றார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு கடலூர் தொகுதியைத் தர வேண்டும் என திமுகவிடம் கேட்டார். ஆனால்,சீட் தரப்படாததால் நேற்று திமுக கூட்டணியைவிட்டு விலகினார். அவருடன் புதிய தமிழகம் கட்சியின் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமியும் விலகி, இருவரும் மூன்றாவது அணி அமைத்துள்ளனர்.
இதையடுத்து திமுக சார்பில் தனக்குக் கிடைத்த எம்.எல்.ஏ. பதவியை இன்று திருமாவளவன் ராஜிணமா செய்தார்.தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அனுப்பப் போவதாக செய்தியாளர்களிடம்திருமாவளவன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதி தலித் மக்களை இழிவுபடுத்தி விட்டார். ஜாதிவெறியைத் தூண்டி வரும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, அரவணைக்கும் அவர் விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய தலித் கட்சிகளை இழிவுபடுத்தி விட்டார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும். வேறு சில கட்சிகளும் எங்களதுகூட்டணியில் சேர முன்வந்துள்ளன. அவர்களையும் சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம் என்றார்.
நாளை சட்டமன்றம் கூடவுள்ள நிலையில் திருமாவளவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சபாநாயகருடன் சேர்த்து முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தனது கடிதத்தை அனுப்புவதன் மூலம் அதிமுகவுடனானஉறவுக்கு திருமாவளவன் அடிபோடுவதாகக் கருதப்படுகிறது. மக்களவைத் தேர்தலின்போது, திருமாவளவன்ராஜினாமா செய்த மங்களூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications