மீண்டும் எம்.எல்.ஏ. தேர்தலில் திருமாவளவன் போட்டி?
திட்டக்குடி:
தான் ராஜினாமா செய்த மங்களூர் சட்டமன்றத் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் தராததால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சின்னத்தில் நின்றுபோட்டியிட்டு வென்ற மங்களூர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் திருமாவளவன். இந்த ராஜினாமாவைசபாநாயகர் காளிமுத்து ஏற்றுக் கொண்டுவிட்டார்.
இதனால், வரும் மக்களவைத் தேர்தலின்போதே இந்தத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடக்கலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அதே தொகுதியில் சுயேச்சையாக நிற்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில்டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்துடன் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கி போட்டியிடுவோம்என திருமாவளவன் அறிவித்திருந்தார்.
ஆனால், இந்த அணியில் ஆரம்பத்திலேயே பிளவு ஏற்படும் சூழல் வந்துவிட்டது. அதிமுக கூட்டணியை டாக்டர்கிருஷ்ணசாமி விரும்புகிறார். ஆனால், திருமாவளவன் அதை விரும்பவில்லை.
இதனால், மங்களூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடக்கும் இடைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடவும், கடலூர்உள்ளிட்ட சில எம்.பி. தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவும் அவர் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications