அடங்கினர் நாகர்கோவில் காங்கிரசார்: கம்யூ. வேட்பாளரை ஆதரிக்க முடிவு
நாகர்கோவில்:
நாகர்கோவில் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக் கோரி மாஜி எம்.பி. டென்னிஸ் தலைமையில் போராட்டம்நடத்தி வந்த கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் கட்சித் தலைமையின் கடும் எச்சரிக்கையை அடுத்து தற்போதுஅடங்கியுள்ளனர்.
தங்களது அதிருப்தியை விலக்கிக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில்ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் நாகர்கோவில் ஆகியதொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் தொகுதியை எதிர்பார்த்திருந்த டென்னிஸ் தலைமையிலானகாங்கிரஸார் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து நாகர்கோவில் தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கு வழங்கக் கோரி வாசன் கொடும்பாவி எரிப்புஉள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதனால் எரிச்சலடைந்த கருணாநிதி காங்கிரசாரை கண்டித்து இருஅறிக்கைகள் வெளியிட்டார்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடம்பேசினர். இயைடுத்து டென்னிஸ் கோஷ்டிக்கு டெல்லியில் இருந்து கடும் எச்சரிக்கை வந்தது.
போராட்டத்தை நிறுத்திவிட்டு உடனடியாக கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தைத்தொடங்காவிட்டால் ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு கல்தா தரப்படும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து அக் கும்பல் அதிருப்தியை விலக்கிக் கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரிக்க முடிவுசெய்துள்ளனர்.
இதன் மூலம் நாகர்கோவில் பிரச்சனைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்நிம்மதியடைந்துள்ளது.
ஆனால், பாண்டிச்சேரி விவகாரம் தொடர்ந்து கொண்டுள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications